உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்" (பொருந்தற் கருத்துவேர்)

57

முயக்கு-மயக்கு = 1. போர்செய்கை. "இரும்புலி மயக்குற்ற” (கலித். 48). 2. கலக்கம். "கனாமயக் குற்றேன்" (மணிமே. 11 : 104). 3. மருளச்செய்யுஞ் செய்கை. “மாய மயக்கு மயக்கே" (திவ். திருவாய். 8:7: 3).

மயக்குதல் = 1. கலத்தல். "பாற்பெய் புன்கந் தேனோடு மயக்கி" (புறம். 34). 2. சேர்த்தல். “உயிரெனுந் திரிமயக்கி" (தேவா. 1189 : 4). 3. மனங் குழம்பச் செய்தல். “குறளை பேசி மயக்கி விடினும்" (நாலடி. 189). 4. மருளச் செய்தல். "மாய மயக்கு மயக்கா னென்னை வஞ்சித்து” (திவ். திருவாய். 8 : 7:4). 5 வேற்றுவயப் படுத்துதல். (கம்பரா. இராவணன்கோ. 51). 6. நிலை கெடுத்தல். "வள்ளையாய் கொடிமயக்கி” (அகம். 6). 7. சிதைத்தல். "எருமை கதிரொடு மயக்கும்" (ஐங்.99). 8. உணர்ச்சி யிழக்கச் செய்தல். "மதகரியை யுற்றரி நெரித்தென மயக்கி.... துகைத்தான்' (கம்பரா. மகுட. 5).

முயக்கம்-மயக்கம் = 1. கலப்பு. “வடசொன் மயக்கமும் வருவன புணர்த்தி” (கல்லா. 62 : 18). 2. ஒரு வேற்றுமை யுருபு மற்றொரு வேற்றுமைப் பொருளிற் கலத்தல். வேற்றுமை மயக்கம். (நன். 317, உரை). 3. எழுத்துப் புணர்ச்சி. உடனிலை மெய்ம்மயக்கம். வேற்றுநிலை மெய்ம்மயக்கம்.

"மெய்ம்மயக் குடனிலை ரழவொழித் தீரெட் டாகுமிவ் விருபால் மயக்கும்"

(1560T. 110)

4. இருபாற் கலப்பாகிய அலித்தன்மை (W.). 5. அறிவின் திரிபு. 6. அறியாமை. "காம வெகுளி மயக்க மிவைமூன்ற னாமங் கெட" (குறள். 360) 7. காமநோய் (அரு. நி.). 8. உணர்விழப்பு.

66

மயங்கு-மசங்கு. மசங்குதல் = 1. மயங்குதல் (தேவா. 567 : 10). 2. ஒளி குறைதல். "மேனியில் வன்னமு மசங்காதோ" (இராமநா. அயோத். 11). முயகு-மயகு-மசகு. மசகுதல் = 1. சுணங்கி நிற்றல். 2. மனந் தடுமாறுதல். மசகு = நடுக்கடலில் திசை தெரியாது ஆழ்ந்தகன்ற இடம் (யாழ்ப்). மசங்கு-மசங்கல் = 1. பகலும் இரவும் கலக்கும் அந்திப்பொழுது. 2. மயக்கம். "மசங்கற்சமண் மண்டைக் கையர்." (தேவா. 567 : 10).

மசங்கு-மசக்கு. மசக்குதல் = 1. குழப்புதல். 2. மயங்கச் செய்தல். "லீலையிலேயுற முறை மசக்கவும்" (திருப்பு. 838).

மசக்கு-மசக்கம் = 1. மயக்கம். 2. மந்தம். 3. மசக்கை.

மசக்கல் = மசங்கல்.

மயக்கி -மசக்கி = அழகாலும் தளுக்காலும் மயக்குபவள்.

மசக்கை = சூலிக்கு உண்டாகும் மயக்கம்.

முய-மய. மயத்தல் = மயங்குதல். "மயந்துளே னுலக வாழ்க்கையை" (அருட்பா. VI, அபயத்திறன். 14).