உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

வேர்ச்சொற் கட்டுரைகள்

மாட்டு = தொடர்புள்ள சொற்கள் ஒரு பாட்டில் அடுத்திருப்பினும் நெட்டிடையிட்டுக் கிடப்பினும், பொருந்தும் வகையிற் கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளுமுறை.

'அகன்றுபொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும்

இயன்றுபொருள் முடியத் தந்தன ருணர்த்தல் மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்”

""

(தொல். செய். 208)

மூட்டு மூட்டம் = 1. உலைமுகம் (யாழ். அக.). 2. சொக்கப்பனை (W.) 3. விறகு (யாழ். அக.). 4. கம்மக் கருவி வகை (யாழ். அக.)

=

மூட்டு -மூட்டான்-முட்டான் அணையாது வைக்கும் நெருப்பு மூட்டம்.

முள் முய்-முய-முயகு- முயங்கு. முயங்குதல் = 1. பொருந்துதல். "முலையு மார்பு முயங்கணி மயங்க” (பரிபா. 6 : 20). 2. தழுவுதல். “முயங்கி கைகளை யூக்க" (குறள். 1238). 3. புணர்தல். "அறனில்லான் பைய முயங்கியுழி" (கலித். 144). 4. செய்தல். "மணவினை முயங்க லில்லென்று' (சூளா. தூது. 100).

99

முயங்கிக் கொள்ளுதல் = கணவனும் மனைவியுமாக வாழ்தல் (W.). முயங்கு-முயக்கு = தழுவுகை. "வளியிடை போழப் படாஅ முயக்கு” (குறள். 1108). "முன்பு மாதவப் பயத்தி னாலவண் முயக்கமர் வார்" (தணிகைப்பு. நாட்டுப். 48).

முயக்கு-முயக்கம் = 1. தழுவுகை. "பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்" (குறள். 913). 2. புணர்ச்சி. "முயக்கம் பெற்றவழி" (ஐங். 93, உரை). 3. தொடர்பு. “ஆணவத்தின் முயக்கமற்று” (தணிகைப்பு. நந்தி. 110).

முயங்கு-மயங்கு. மயங்குதல் = 1. நெருங்குதல். 2. கலத்தல். 3. ஒத்தல். "காரிருள் மயங்குமணி மேனியன்" (பரிபா. 15 : 50). 4. கைகலத்தல். “தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து” (புறம். 19). 5. கலக்கமுறுதல். "மயங்கின வாய்ப்புளும்" (பு.வெ. 10, சிறப். 11). 6. அறிவு கெடுதல். “புலான் மயங்கான் (ஏலா. 2). 7. மருளுதல். 8. வேற்றுவய மாதல். 9. வெறி கொள்ளுதல். “தாமயங்கி யாக்கத்துட் டூங்கி... வாழ்நாளைப் போக்குவார்' (நாலடி. 327). 10. மாறுபடுதல். "மேனியு முள்ளமு மயங்காத் தேவர்" (கல்லா. 82 : 30). 11. நிலையழிதல். “ஆள்பவர் கலக்குற மயங்கிய நன்னாட்டு’ (மணிமே. 23 : 104). 12. வருந்துதல். "முயங்கல் விடாஅ விவையென மயங்கி’ (அகம். 26). 13. தாக்குண்ணுதல். “காலொடு மயங்கிய கலிழ்கட லென” (பரிபா. 8:31). 14. ஐயுறுதல். 15. தயங்குதல். அவரைப் போய்ப் பார்ப்பதற்கு மயங்குகிறான் (உ.வ.). 16. உணர்ச்சி யிழத்தல்.

மயங்கிசைக் கொச்சகம் குறைந்தும்வரும் கொச்சகக் கலி.

=

உறுப்புக்கள் மயங்கியும் மிக்கும்