உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்' (வளைதற்) கருத்து

71

முல் முர்-முரு-முருகு

=

பிறைபோல் வளைந்த காதணி “வச்ர

முருகையெந்தக் கோனான்றன் கையிற் கொடுத்தானோ' (விறலிவிடு. 703).

முரு மரு மரை = 1. திருகுவகை. 2. விளக்குத் திரியை ஏற்றியிறக்கும் திருகுக்காய்.

மரையாணி = திருகாணி.

தெ. மர, க. மரெ.

=

முரு-முரி. முரிதல் 1. வளைதல். "முரிந்து கடைநெரிய வரிந்த சிலைப்புருவமும்” (மணிமே. 18:161). 2. வளைந்து ஒடிதல் (சூடா.) (கரும்பு கம்பு முதலியவற்றை ஒடித்தற்கு அவற்றை வளைத்தல் காண்க.) 3.கெடுதல். "இடைக்கண் முரிந்தார் பலர்" (குறள். 473). 4.தோல்வியுறுதல். "முற்றிய வமரர் சேனை முரிந்தன" விநாயகபு.34 :15). 5.சிதறுதல். "பஞ்சினம் புகைமுரிந் தெழுந்தென விண்ணத் தலமர" (கல்லா.7). 6. தளர்தல். "முரிந்தநடை மடந்தையர்த முழங்கொலியும் வழங்கொலியும்" (திருவிசை. கருவூ. 5:10). 7.தவறுதல். "முரியுங் காலைத் தெரிய மற்றதிற் றட்டினள்' (பெருங். வத்தவ. 12:99). 8. நீங்குதல். 9. நிலைகெடுதல். "இடை முரிந்து வேந்தனும் வேந்து கெடும்" (குறள். 899). 10. குணங்கெடுதல். "ஒழுகுபால் கதிர்வெயிற் படமுரிந்து" (திருச்செந். பிள்ளைத். செங்கீரை. 1).

99

முரி = முரிதல் = வளைதலைச் செய்தல். "புருவமும் முரி முரிந்தவே” (சீவக. 2310).

ம., க. முரி.

முரித்தல் = 1. வளைத்து ஒடித்தல், "நன்சிலை முரித்திட் டம்பை வாடினன் பிடித்து நின்றான்" (சீவக.2185). 2.தோற்கச் செய்தல் (யாழ். அக.). 3. அழித்தல். “மதிலொடு வடவாயிலை முரித்து" (திருவாலவா. 24:4). 4. திறை மையாக நடாத்துதல் (W.). வெட்டி முறித்தல் என்னும் வழக்கை நோக்குக.

ம. முரிக்க, தெ. முரியு.

.99

முரி = 1. வளைவு. "முரியா ரளகத் தடாதகை” (திருவிளை.பயகர. 8). 2. துண்டு, 3. நொய்யரிசி. "குத்திய வரிசி யெல்லா முரியறக் கொழிக்க வாரீர்' (தக்கயாகப். 736). 4. முழுதிற் குறைவானது. “மக்கண் முரியே" (கலித். 94) 5.சிதைவு. (சிலப்.25:146,அரும்.). 6. எழுதிய ஓலைநறுக்கு. 7. இசைப்பாவில் இறுதிப்பகுதி (சிலப். 6:35, உரை). 8. நாடகக் தமிழின் இறுதியில் வருஞ் சுரிதகம் (தொல். பொருள். 444, உரை).

ம., தெ., க., து. முரி.

முரிவு = 1. மடிப்பு (யாழ். அக.). 2. வளைந்துஓடிகை. (யாழ். அக.). 3 சுருக்குகை. "புருவ முரிவுகண் டஞ்சி" (முத்தொள். களம்). 4. நீங்குகை. "இளையர் மார்ப முரிவில ரெழுதி வாழும்" (சீவக. 372). 5. வருத்தம். "பாவைமார் முரிவுற் றார்களின் மூர்ச்சனை செய்பவால்' (சீவக. 1627). சோம்பு (அரு. நி.).

6.