உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்' (வளைதற்) கருத்து

க. முத்து.

முற்று = முற்றுகை. "முற்றியார் முற்றுவிட” (பு. வெ. 6 25).

73

முற்றுகை = 1. சூழ்கை. 2. கோட்டையைப் பகைவர் படை வளைக்கை. 3. நெருக்கடி (W.)

=

முற்றுகை - முற்றிக்கை 1. கோட்டையைப் பகைவர் படை வளைக்கை. 2. நெருக்கடி நிலைமை. சாப்பாட்டிற்கு மெத்த முற் றிக்கையாயிருக்கிறது (இ.வ.).

தெ. முத்ததி, க. முத்திகெ (g).

முற்றிக்கை-முற்றிகை = கோட்டையைப் பகைவர் படை வளைக்கை.

=

முறுகு-மறுகு. மறுகுதல் 1. சுழலுதல். "மறுகக் கடல்கடைந்தான்" (திவ். இயற். 268). 2. பலகாலுந் திரிதல். "மலிவன மறுகி” (குறிஞ்சிப். 97). 3. மனங்கலங்குதல். "நெஞ்சின் மறுகல் நீ" (சீவக. 946). 4. வருந்துதல். “கிடந்துயிர் மறுகுவ தாயினும்” (அகம். 29). 5. சிதைதல். “குடன் மறுகிட' (கம்பரா. இந்திரசித். 19). 6. அரைபடுதல் "நறுஞ் சாந்து மறுக” (மதுரைக். 553).

மறுகு-மறுக்கு மறுக்குதல் = 1. மனத்தைக் கலக்குதல். "மறுக்கி வல்வலைப் படுத்தி” (திவ். திருவாய். 4: 9: 6). 2. எண்ணெய் முதலியவற்றால் தொண்டை கரகரத்தல் (இ.வ.)

மறுக்கு = மனக்கலக்கம். “மறுக்கினோ டிரியல் போயுற" ("கம்பரா. பள்ளிபடை. 109).

"

மறுக்க-மறுக்கம்=1. சுழற்சி. 2. மனக்கலக்கம் "மன்பதை மறுக்கத் துன்பங் களைவோன்" (பரிபா. 15 52). 3. துன்பம். “திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும் பெருமையார்" (தேவா. 17 : 4).

=

மறுகு-மறுகல் 1. சுழற்சி. 2. கலங்குகை. "பேதையேன் நெஞ்சம் மறுகல் செய்யும்” (திவ். திருவாய். 9 4 4). 3. நோய் திரும்புகை (W.).

மறுகல்-மறுகலி. மறுகலித்தல் = நோய் திரும்புதல் (யாழ். அக.).

முறு-முறி. முறிதல் = 1. வளைந்து ஒடிதல். “அச்சு முறிந்ததென்றுந்தீபற” (திருவாச. 14 : 2). 2. தோற்றல். 3. நிலைகெடுதல். “அரக்க னெடுத்து முறிந்து (பெரியபு. திருஞா. 77). 4. அழிதல். “வீரமுறிந்த நெஞ்சினர்" (விநாயகபு. 79 : 66). 5. தன்மை கெடுதல். பால் முறிந்து போயிற்று (உ.வ.). 6. பதந் தப்புதல். நெய் முறியக் காய்ந்ததனாற் கசக்கின்றது (உ.வ.). 7. பயனறுதல். இரசம் முறிய மருந்து சாப்பிடுகிறது (W.). 8. குலைதல். 9. அருள் மாறுதல்.

ம. முரிக, தெ. முரிக்கொனு. க. முரி..

முறித்தல்

=

ஒடித்தல்.பொருசிலை முறித்த வீரன் “பாரத கிருட்டிண. 141). 2. கிழித்தல். வேட்டியை இரண்டாக முறி (உ.வ.). 3. நிறுத்தி விடுதல். ஏலச்சீட்டை முறித்துவிட்டான் (உ.வ.). 4. தன்மை மாற்றுதல்.