உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

வேர்ச்சொற் கட்டுரைகள்

“ஆசைப்பிணி பறித்தவனை யாவர் முறிப்பவர்” (கம்பரா. அங்கத. 18). 5.நெசவுத்தறியில் உண்டை மறித்தல். 6. பெருவினைகளைச் செய்து முடித்தல். நீ பலவற்றை வெட்டி முறித்து விட்டையோ? (உ.வ.).

முறி = 1. துண்டு. “கீண்ட வளையின் முறியொன்று கிடப்ப “ஞானவா. சிகித். 107). 2. உடைத்த தேங்காயிற் பாதி. தேங்காய் முறி. 3 பாதி. 4. ஆவணம். “மோகவாசை முறியிட்ட பெட்டியை” (தாயு. சிற்ப. 1). 5. ஓலைப் பற்றுமுறி. 6. துணி. "கொள்ளிமுறிப் பாதியேது" (அரிச் பு. மயான 41 7. நகர்ப்பகுதி, சேரி (பிங்.). 8. அறை (நாஞ்.). 9. உயர்ந்த வெண்கலம்.

முறி - மறி. மறிதல் = 1. மடங்குதல். 2. முறுக்குண்ணுதல். “திரிந்து மறிந்துவீழ் தாடி” (கலித். 15). 3. கீழ்மேலாதல். "மலைபுரை யானை மறிந்து’ (பு. வெ. 7:9). 4. திரும்புதல், மீளுதல். “மறிதிரை” (கலித். 121). 5. முதுகிடுதல். "மைந்தர் மறிய மறங்கடத்து” (பு. வெ. 6:14). 6. சாய்தல். “எரிமறித் தன்ன நாவின்” (சிறுபாண். 196). 7. விழுதல் "நிழன்மணிப் பன்றி யற்று மறியுமோ' (சீவக. 2201). 8. பலகாலுந் திரிதல். 'நயனாடி நட்பாக்கும் வினைவர்போன் மறிதரும் (கலித். 46). 9. நிலைகுலைதல். "ஆம்பன் முகவரக்கன் கிளையொடு மறிய" (கல்லா. கணபதி வாழ். 10. அறுபடுதல். "உன் காது மறியும்” (திவ்.பெரியாழ் 2 3 6, அரும்.). 11. தடைப்படுதல். 12. சாதல். “மறிந்த மகன்றனைச்சுட” (அரிச். பு. மயான. 38).

மறித்தல = 1. திருப்புதல். 2. திரும்பச் செய்தல். 3. கீழ் மேலாக்குதல் (W.) 4. தடுத்தல். “மறுபிறப் போட மறித்திடுமே" (திருவாச. 36:2). 5. கிடை யமர்த்தல். நன்செய்க்கு மூன்று கிடை மறிக்க வேண்டும் (உ.வ.). 6. தடுத்தற் குறியாகக் கையசைத்தல். "மாற்றருங் கரதல மறிக்கு மாறு" (கம்பரா.

உண்டாட். 21).

மறி = மறியல்.

மறிகால் = மறுகால்.

மறிசல் = அணை.

மறித்து = திரும்ப. “மறித்தாங் கிழிந்து" (மணிமே. 10:88).

மறித்தும் = திரும்பவும், மீண்டும் "வேலானை மறித்துங் காண்க சீவக. 1225).

மறிதரல் = மீளுகை. (பிங்.).

மறிந்து - மீண்டும். "மறிந்து வந்தனரே மாற்றோர்" (பெருங். மகத. 19

80).

மறிப்பு = மறியல்.

மறிபடுதல் = 1. தடுக்கப்படுதல். 2. இடையூறுபடுதல். (கோயிலொ. 13). 1. வணிகம், தொழில், கல்வி, போக்குவரத்து முதலியன

மறியல்

=

நடைபெறா வண்ணம் தடுத்தல். 2. சிறைக்கூடம்.