உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்' (வளைதற்) கருத்து

75

மறிவு = 1. திரும்புகை. "மறிவிலாச் சிவகதி” (அருட்பா, ப, செவி யறி.6) கேடு. (ஐங். அரும்.).

முறு - முறை = 1. வளைவு. 2. வேலையாள் திருப்பம் (turn)."பணிமுறை மாற முந்துவர்" (கம்பரா. ஊர்தேடு. 49). இன்று குழாய்த் தண்ணீர் பிடிக்க வேண்டியது யார் முறை? (உ.வ.) 3. தடவை. எழுமுறை யிறைஞ்சி" (சீவக. 3052). 4. அடைவு. "முறைமுறை...கழியுமிவ் வுலகத்து" (புறம்.29). 5. ஒழுங்கு. “முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி” (தொல். சி. பாயி.). 6. ஊழ். “ஆருயிர் முறைவழிப் படூஉம்” (புறம். 192). 7. ஒழுக்கம். "முறையி லோயைத் தென்புலத் துய்ப்பன்” (கம்பரா. வாலிவதை. 177). 8. கற்பு. "முகிழ்மயங்கு முல்லை முறைநிகழ்வு காட்ட” (பரிபா. 15:39). 9. உறவு. “பொருட்டுமுறை யாதியின்” (நன். 298). 10. மணஞ்செய் யுறவு. முறை மாப்பிள்ளை. முறைப்பெண், முறைகாரன்.11. உறவுமுறைப் பெயர். “பெரியாரை யென்று முறைகொண்டு கூறார்" (ஆசாரக். 91). 12. நேர்மை, முறைகேடு. 13. செங்கோல் நெறி. 'முறைகோடி மன்னவன் செய்யின்" (குறள். 559). 14. நெறிமுறை. காக்கைப் பனம் பழமுறை (காக தாலீய நியாயம்). 15. நூல் வகுப்பு. பன்னிரு திருமுறை. 16. கட்டளை நிறைவேற்றுகை. முறைசெய்வோர்.17. தன்மை. “முத்தீப் பேணும் முறையெனக் கில்லென" (மணிமே. 22:48), 18. உரிமை. "முறைமை யென்பதொன் றுண்டு" (கம்பரா. நகர்நீங்கு. 5.

66

ம. முர, க. முரெ, தெ. மொர.

முறைவன் =1. இறைவன். "நான்மறை முக்கண் முறைவ னுக்கே” (பதினொ. பொன்வண். 52). 2. பாகன். "மேலியன் முறைவர் நூலிய லோசை" (பெருங். உஞ்சைக். 44 : 79).

முறை-மிறை=வளைவு. "மிறைக்கொளி திருத்தினானே" (சீவக. 284).

மிறைக்கொளி திருத்துதல்

=

படைக்கலத்தின் வளைவு நீக்குதல்.

"மிறைக் கொளி திருத்துவார்" (சீவக. 2293).

மிறைக்கொளுவுதல் = படைக்கல வளைவு. நீக்குதல். "எஃக மிறைக் கொளீஇ” (பு. வெ. 8 21).

ஒ.நோ:முண்டு-மிண்டு, முடுக்கு-மிடுக்கு.

(ஆட்சேபித்தல்)

முறு-மறு. மறுத்தல் = செ.குன்றாவி.) 1. திருப்புதல். 2. திரும்பச் செய்தல். 3. மாற்றுதல். 4. தடுத்தல். "மறுத்து மறுத்து மைந்தர் சார” (கலித். 104). 5. தடை ‘உடன்படல் மறுத்தல்.' (நன்.11) 6. நீக்குதல். "கொல்லான் புலாலை மறுத்தானை" (குறள். 260). 7. இல்லை யென்னுதல். “அவர்மறுத் தகறல் காணா" (கம்பரா. மிதிலைக். 125).

கூறுதல்

(செ. கு. வி.) இல்லாமற்போதல். "இப்பேறுதான் ஒருநாளுண்டாய்

மற்றை நாள் மறுக்கையன்றிக்கே." (ஈடு, 2: 7: 7).