உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

வேர்ச்சொற் கட்டுரைகள்

மறு மறுப்பு = 1. மறுக்கை.2. எதிர்க்கை. 3. கண்டனம். 4. மறுவுழவு. (யாழ்ப்.). 5. முன்னுழுத சாலுக்குக் குறுக்காக வுழுகை (நாஞ்.). மறுப்ப = ஓர் உவம வுருபு "மாற்ற மறுப்ப ஆங்கவை யெனாஅ" (தொல். உவ. 11)

மறுத்தருதல் = திருப்பல், மீட்டல். "மையற்ற படிவத்தான் மறுத்தர லொல்வதோ" (கலித். 15).

மறுத்தரவு = திருப்புகை, மீட்கை. "யாதொன்று மென்கண் மறுத்தர வில்லாயின்" (கலித். 81).

மறுத்தரவு - மறுதரவு = மீட்கை. "மறுதர வில்லாளை யேத்திநாம் பாட" (சிலப். 24, பாட்டுமடை, இறுதி).

மறுக்க = திரும்பவும். மறுக்க நீ வரக்கூடாது (உ.வ.).

நீ

மறுத்து = 1. திரும்ப, மீள. “மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்" (குறள். 312). 2. மறுபடியும் "மறுத்துக் கேள்வி கொள்ள வேண்டாதபடி" (ஈடு, 13 3). 3. திரும்பவும், மேலும். "மறுத்து மின்னுமொன் றுரைத்திடக்கேள்” (அரிச். பு. சூழ்வி. 128).

மறுத்துரைத்தல் = தடை கூறுதல், எதிர்த் துரைத்தல். “மறுத்துரைப் பதுபோ னெஞ்சொடு புணர்த்தும்" (தொல். பொரு. 2).

மறுத்துப் போதல் = 1. ஆவு கறவை நின்று போதல் (W). 2.மரம் காய்ப்பு நின்று போதல் (W).

மறுமறை = 1. மறுப்பு. 2. எதிர்மறை. தொழாநிர் என்பது மறையின்றித் தொழுது என்று பொருள் தருமேனும் உணர்க. (மலைபடு. 231, உரை). 3. விலக்குகை. “பொய்ம்மை புலாற்கண் மறையுடைமை" (ஏலாதி.6).

எதிர்மறு எதிர்மறை.

மறுக்களித்தல் = 1.மறுத்தல். 2. நோய் திரும்புதல். மறுக்களித்துப் பேசுதல் = தான் சொன்னதை மறுத்துப் பேசுதல் (உ.வ.)

மறுதலை = 1. எதிர்க் கட்சி. “தன்னை மறுதலை பழித்த காலையும்” (நன். 53). 2. எதிரியின் கொள்கை. “மறுதலைக் கடாஅ" (தொல். மரபு. 105). 3. எதிர்ப்பொருள். “இன்மை யன்மை மறுதலை யென்னும் முப்பொருள்" (சி. போ. சிற்.2 1, ப.34). 4. பகைவர். "மறுதலை சுற்ற மதித்தோம்பு வானேல்' (ஏலாதி,16). 5. நிகர். “அரிமாவிற்கு மறுதலை போல்வா ரொருவர்" (திருக்கோ. 225), உரை). 6. இரண்டாமுறை. மறுதலை இங்கு வராதே (உ.வ).

மறுதலைத்தல் = (செ. கு. வி.) எதிரிட்டுத் தோன்றுதல். “நாணமுத னான்கு மண்டி யொருசார் மறுதலைப்ப” (திருவிளை. வளையல். 23). (செ. குன்றாவி.) மறுத்தல். “மறுதலைத் துரைக்கு மெல்லை" (அரிச். பு. நகர்நீ.146).