உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்' (வளைதற்) கருத்து

77

மறுதலைக்காய் = பருவ விளைச்சற்குப் பின் காய்க்கும் காய்கறி முத லியன.

மறுதலைப் பெண் = மறுமனைவி.

மறுமனைவி. “அரவ மறுதலைப் பெண்

கூட்டுவிக்கும்” (சினேந். 267).

மறுதாய் = மாற்றாந்தாய்.

மறுநாள் = அடுத்த நாள்.

ம.மறுநாள், தெ. மறுநாடு.

மறுபடி = 1. திரும்ப. 2. மற்றொரு படி (copy). 3. விடை (நாஞ்.)

=

மறுமாடி மாடிக்கு மேல்மாடி. வீட்டிற்கு மறுமாடி வைத்துக் கட்டியிருக்கிறான்.

மறுமாலை சூடுதல் = கணவனின் அறுபான் விழாவில் நடைபெறும் மாலை மாற்றுச் சடங்கு.

மறுமாற்றம் = மறுமொழி. "மறுமாற்ற மற்றொருவர் கொடுப்பாரின்றி” (பெரியபு. திருஞான. 474)

தெ. மருமாட்ட, க. மருமாத்து.

மறு மறுவல் = திரும்ப. மறுவலும் = திரும்பவும். "மறுவலும் புல்லிக் கொண்டு" (சீவக. 1052).

மறுவலிடுதல் = 1. திரும்புதல். "பின்னை மறுவவிடாதிறே” (ஈடு, 2: 10:8). 2. சிறிது எஞ்சி நிற்றல். "மல்லிகை....... கமழ்தென்றல் மறுவலிடுகையாலே" (ஈடு, 10: 3: 5).

மறு-மற்று = (கு. வி. எ) 1. மறுபடியும் (W.). 2. பின். 3.வேறு. 4. மற்றப்படி. (இடைச்சொல்) 1. வினைமாற்றுக் குறிப்பு. 2. பிறிதுப்பொருட் குறிப்பு. 3. அசைநிலை.

"மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை'

"வினைமாற் றசைநிலை பிறிதெனு மற்றே

""

99

ஒ. நோ: Gk. meta, after, occasionally with sense ‘change.' மற்று-மற்ற = பிற, வேறு.

(தொல்.இடை.14)

(நன். 433)

மற்று-மற்றும் = 1. மேலும். 2. மீண்டும். "உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து” (குறள். 344).

மற்று-மற்றையது = மற்றது.

'மற்றைய தென்பது சுட்டிய தற்கினம்" (நன்.434).

மறு-மாறு. மாறுதல் = (செ.கு.வி.) 1. வேறுபடுதல். "மாறா மனங் கொண்டு” (திருநூற்.47). 2. பின்வாங்குதல். "சூன்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை (பெரும்பாண். 136). 3. குறைதல். நோய் கொஞ்சம்

99