உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

வேர்ச்சொற் கட்டுரைகள்

மாறியிருக்கிறது (உ.வ.). 4. இடம் வேறுபடுதல். 5. நீங்குதல். "உறக்கம் மாறினான்" (கம்பரா. ஆறுசெ.7). 6. முதுகிடுதல். “மாறா மைந்தின்" (மலைபடு. 332). 7. கூத்தாடுதல் (பிங்.) 8. இறத்தல். இவ்வான்மாக்கள் மாறிப் பிறந்துவரும் (சி.போ.சிற். 2 3,ப.47). 9. இல்லையாதல். "பரப்பு மாறப் பூத்துக் குளிர்ந்த புனலை" (ஈடு, 2 : 8 : 2). 10. பொய்படுதல். "நாவிற் புனைந்த நன்கவிதை மாறாமை" (பரிபா. 6:8)

(செ.குன்றாவி). 1. விற்றல். “நாண்மோர் மாறும்" (பெரும்பாண். 160). 2. பணி செய்தல். "முன்னின பணிமுறை மாற முந்துவார்" (கம்பரா. ஊர்தேடு. 49). 3. பிறனுக்குதவுதல். "பனவனுக்காப் பாமாறி யார்க்கு" (குமர.பிர. மீனாட். இரட். 5). 4. கழித்தல் “”மாறு மென்மலரும்" (பரிபா. 6: 46). 5. கைவிடுதல். "புரிபுநீ புறமாறி" (கலித். 15). 6. மறுத்தல் (யாழ்ப்.). 7. எண் பெருக்குதல். "ஐம்பாலும் பொதுவுமான ஆறானும் மாற நூற்றெட்டாம்" (நன். 269, மயிலை). 8.அடித்தல் (இ.வ.).

க.மாறு.

மாறு = 1. வேறுபாடு. “மாறிலாத மாக்கருணை வெள்ளமே” “(திருவாச. 5:91). 2. எதிர். அவன் எதற்கும் மாறாயிருக்கிறான். 3. பகை. “மாற்றிரு வேந்தர்” (புறம். 42). 4. ஒவ்வாதது. “மாறல்ல துய்க்க” (குறள். 944). 5. ஒப்பு. "மாறன்மையின்.... இளையரையும் எறியான்" (சீவக 2261). 6. மாற்றுருப்படி. “மாறு சாத்தி யென்பிழை பொறுப்பீர்” (பெரியபு. அமர்நீதி. 24). 7. எதிர்நன்றி (பிரதியுபகாரம்). “வழக்கொடு மாறுகொளன்று” (திவ். இயற். பெரிய திருவந். 13). 8. மறுமொழி. "மாறெதிர் கூறி மயக்குப் படுகுவாய்" (கலித் 116:15).9 இம்மை நீங்கும் இறப்பு. ""நகாஅலென வந்த மாறே" (புறம். 253). 10. இறப்பின் பின் பிறப்பு. "மாற்றிடைச் சுழலும் நீரார்” (மேருமந். 136). 11. குப்பை கூளம் நீக்கும் துடைப்பம். “சல்லிகளை மாறெடுத்துத் தூர்த்தும்” (பணவிடு. 285). 12. துடைப்பம்போ லுதவும் பருத்தித்தூறு. 13. தூறுபோன்ற வளாறு. (W.). 14 வளாறு போன்ற பிரம்பு. "மாற்ற லாற்றுப் புடையுண்டும்” (சீவக. 2794). 15 மாறுதல் நேரும் வகை. "விளங்கக் கேட்ட மாறுசொல்” (புறம்.50).

6699

(இடைச்சொல்). 1. ஏதுப் பொருளிடைச் சொல். “அனையை யாகன் மாறே" (புறம். 4.). 2. தொறுப்பொருளிடைச் சொல். பகல் மாறு வருகி றான் பகல்தொறும் வருகிறான்.

=

மாறு மாறன் = 1. வலிய பாண்டியன். “பூந்தார் மாற" (புறம்.55) 2. சடத்திற்கு மாறான நம்மாழ்வார் (சடகோபன்). "சடகோபன் மாறன்" திவ். திருவாய். 2:6:11). 3. மாற்றான். "வல்வினைக்கோர் மாறன்" (திருவரங்கத்தந். காப்.5)

=

மாறு-மாறல் ஏது, கரணியம் (முகாந்தரம்) (W).

மாறு மாற்று = 1.வேறுபடுத்துகை. 2. ஒழிக்கை. "மாற்றே மாற்ற லிலையே” (பரிபா. 4:53). 3. மாற்று மருந்து. 4. பண்டமாற்று. 5. விலை (யாழ்.