உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்' (வளைதற்) கருத்து

79

அக). 6. மாற்றுடை. 7. மங்கல அமங்கல நாள்களிற் பந்தற்குக் கட்டும் வண்ணான் துணிகள். 8. பொன்வெள்ளி உரைமாற்று. "மாற்றள வற்ற பொன்னுடுத்தாய்” (அட்டப் அழகரந். 2). 9. உரைமாற்று நிறம். (ஈடு,4.3.7 ஜீ). 10. எதிர் (யாழ். அக.). 11. ஒப்புமை. "மாற்றிரி யாடிப் பாவையோடு" (ஞானா. 6:20). 12. வலிமை. "மாற்றாரை மாற்றழிக்க வல்லாளை" (திவ். திருப்பா.15). 13. ஓரேர் மாடு ஒருநாளில் உழக்கூடிய நிலம் (W.).

மாற்று - மாற்றம் = 1. மாறுபட்டநிலை. "மாற்றமாம் வையகத்தின்” (திருவாச. 1:81). 2. வஞ்சின மொழி. “மாற்ற மாறான் மறலிய சினத்தன்" (புறம். 341). 3. பகை. “மாறுகொ ளுழுவையு மாற்றந் தீர்ந்தவே" (நைடத. கான்புகு. 3). 4. கடிவு (பரிகாரம்). 5. மாறிச் சொல்லும் விடை. "மறுதலைக் கடாஅ மாற்றமும்" (தொல். மரபு.105). 6. சொல். "விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான்" (குறள்.689). "மாற்றம்....சொல்லே" (நன். 458). 7. பேச்சு. "மாற்ற முரைக்கும் வினை நலம்" (நான்மணி. 45).

தெ. மாட்ட, க.மாத்து, மாத்தனு, பட. மாந்த்.

ஒ.நோ: It. motto, word, F. mot (mo), word, saying.

முல் - முள் - முண்

முணமுணவு முணகு - முணங்கு.

முணங்குதல் = 1.உள்வளைதல். உள்ளடங்குதல். 2. அடங்குதல் (W.). 3. குரலையடக்கிப் பேசுதல்.

முணங்கு = 1. சோம்பலால் ஏற்படும் உடம்பு வளைபு, முடக்கம், சோம்பு (இலக். அக.). 2. அடக்கம் (சூடா.).

முணங்கு நிமிர்தல் = உடம்பை நீட்டிச் சோம்பல் முறித்தல். "முணங்குநிமிர் வயமான்" (புறம். 52), "முணங்குநிமிர்ந் தளைச்செறி யுழுவை யிரைக்குவந் தன்ன" (புறம். 78).

முணங்கு முணக்கு முணக்குதல் = உள் வளைத்தல். "வள்ளுகிர் முணக்கவும்" (நற். 114).

=

முரி = வளைவு. முரி-மூரி = சோம்பல் முறித்தல்.

மூரிநிமிர்தல் = உடம்பை நீட்டிச் சோம்பல் முறித்தல்.

முணகு-முனகு. முனகுதல்=குரலையடக்கிப் பேசுதல்.

முணகு-முனங்கு. முனங்குதல் = 1. குரலையடக்கிப் பேசுதல். முணுமுணுத்தல். 2. புலம்புதல். 3. முறுமுறுத்தல்.

ஒ.நோ.OE moen, obs. mean, E. moan, to make a long low murmur of physical or mental suffering, to complain, to lament misfortune, to lament for dead person.

முண் - மண் மாண் = மடங்கு. பன்மாண் (பரிபா. 13:62).

ஒ.நோ: E. fold = மடி. மடங்கு.