உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

வேர்ச்சொற் கட்டுரைகள்

மண் மணி 1 = (வட்ட வடிவான பொருள்கள்) 1. நாழிகை வட்டில். 2.ஒரு நாழிகை நேரம். 3. கோபுர நாழிகை மணி. 4. நாழிமணி. 5. கைம்மணி. 6. பெருவட்ட மணிப் பலகை (gong). 7. சிறுவட்ட மணிப் பலகை (சேகண்டி). 8. அறுபது நிமைய நேரம் (இக்). 9. கடிகாரம் (இக்). 10. மணிக்கூண்டு.

=

மணி (உருண்டை வடிவான பொருள்கள்) 1. கண்மணி. “கருமணியிற் பாவாய்” (குறள். 1123). 2.பொன்மணி. “மணியிரு தலையுஞ் ரு சேர்த்தி” (சீவக. 977). 3. பாசிமணி. 4. கூலமணி. 5. உருத்திராக்கமணி. “மாசிலாத மணிதிகழ்மேனி" (பெரியபு. திருக்கூட்ட. 6). 6. சிறுமணியரிசி. 7. பெருமணியரிசி. 8. வலையோரத்திற் கட்டிய குண்டு. "இனமணி விளிம்புறக் கோத்து” (திருவாலவா. 22: 13). 9.மீன்வலை முடிச்சு. மணிவலை. 10. நண்டு, தேள் முதலியவற்றின் கொடுக்குமணி.

முள் முட்டு -முட்டை = 1. உருண்டையான பறவை முட்டை. "புலவுநாறு முட்டையை....கிழங்கொடு பெறூஉம்” (புறம். 176). 2. உலகக் கோளம். “திசைமுகன் செய்த முட்டை கீண்டிலது” (கம்பரா. திருவடி. 66). 3. சாணியுருண்டையை வட்டமாகத் தட்டிக் காயவைத்த வறட்டி. "நெருப்புக்கு முட்டையும்" (அருட்பா, 1. திருவருள். 105). 4. வட்டச் சிறுகறண்டி. “ஒரு முட்டை நெய்" (பதினொ. கோடித். 16).

ம. முட்டை. க. முட்டெ.,

முட்டைக்கண், முட்டைக் கண்ணீர், முட்டைக் கத்தரி, முட்டைக் காளான், முட்டைக் கோசு முதலிய காட்டுச் சொற்கள் உருண்டை வடிவான பொருள்களைக் குறிப்பன.

முட்டு-முட்டான் = 1. மஞ்சட்கிழங்கு. 2. திருநீறு நீற்றுவதற்குரிய சாணவுருண்டை. திருநீற்றிற்கு முட்டான் போடு (உ.வ).

முட்டு-முட்டி = பேய்க் கொம்மட்டி.

முள்-முண்டு = உருண்டகட்டை, முண்டும் முடிச்சும்.

=

முண்டு-முண்டான் = மஞ்சட்கிழங்கு.

முண்டு-முண்டை= 1. முட்டை. "முண்டை விளைபழம்" (பதிற். 60:6). 2. கருவிழி.

மு

ண்டை-மிண்டை

=

கருவிழி. “விழித்திருக்க மிண்டையைக்

கொள்வான்" (கலித். 108, உரை).

முட்டு - முத்து = உருண்டையான விதை. குருக்குமுத்து.

குறுமுத்தம் பழம் = நீளுருண்டை வடிவான மிதுக்கம்பழம்.

முண் முணம் - முடம் = 1. வளைவு. "முடத்தொடு துறந்த வாழா வன்பகடு (புறம். 307)

99

66

99

2. வளைந்தது. "முடத்தாழை (கலித். 136) “அல்லோர்க் களிக்கு மது முடத் தெங்கே" (நன்.35). 3. கைகால் வளைவு. 4.