உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்' (வளைதற்) கருத்து

81

ஆடல் பாடல் முதலியவற்றின் குற்றம். “பண்ணே பாணி தூக்கே முடமே”

(சிலப். 3 : 46).

=

முடம் -முடவன் = 1. நொண்டி. “காலான் முடவன்" (தொல். சொல். 73, இளம்பூ.). 2. அருணன் (அக. நி.). 3. காரி (பிங்.)

முடம் -முடவு. முடவுதல்

=

நொண்டுதல் (யாழ்ப்)

முடவாண்டி (முடம் + ஆண்டி = கொங்க வெள்ளாளர் குலத்திற் பிறக்கும் பிறவி முடக்குழந்தைகளை எடுத்து வளர்க்கும் இரப்போர் வகையினர்.

66

முடம்-முடல்-முடலை = 1. உருண்டை (பிங்.) 2. முறுக்கு, திருகல். முடலை விறகின்” (மணிமே. 16:26) . 3. முருடு. (திவா.) 4. கழலை. (அக. நி.). 5. மனவன்மை. "நன்றுணராய முடலை முழுமக்கள்" (பழ.25). 6. பெருங் குறடு (அக.நி.).

முடங்கொன்றான் - முடக்கொற்றான் = முடச் சூலையைப் போக்கும் கொடிவகை.

முடம் - முடந்தை = 1. முடம். 2. வளைந்தது. "முடந்தை நெல்லின் கழையமல் கழனி" (பதிற் . 32 : 13). 3. விடாய்க் கட்டுநோய் (M.L.).

முடம் - முடங்கு. முடங்குதல் = 1. வளைதல். “அடங்கினன் முடங்கி யலம்வந்து” (உத்தரரா. வரையெடுத்த. 72). 2.உடம்பை வளைத்துப் படுத்துக் கொள்ளுதல். “பசியட முடங்கிய பைங்கட் செந்நாய்" (நற். 103) 3. தங்குதல். "அறுகாற் பறவை முடங்கிய செஞ்சடை முக்கண னார்க்கு" (பதினொ. பொன்வண். 64). 4. சுருங்குதல். "இடங்குறை வாயிலின் முடங்கி யிருந்துழி” (பதினொ. திருவிடை. மும். 22). 5. கைகால் வழங்காமற்போதல். “கைகால் முடங்கு பொறியிலி (பிரபுலிங். துதி. 1). 6. தடைப்படுதல், வேலை முடங்கிவிட்டது .7. கெடுதல். “சிறுமை பொருந்திப் பெருமை முடங்கி (திருப்பு. 372).

66

தெ. முடுகு (g), க. முடுகு.

முடங்கு = 1. முடக்குச் சூலைநோய். 2. தெருவளைவு. 3. தெருச்சந்து. முடங்கல் = 1. மடங்குகை (சூடா.) 2. சுருளோலைக் கடிதம் "மண்ணுடை முடங்கல்" (சிலப். 13; 90) 3. முடக்குச் சூலை (சூடா.). 4. முடத்தாழை (பிங்.). 5. பணம் முடங்கிக் கிடக்கை. 6. தடைப்படுகை. "முயலு நோன்பு முடங்கலிலான்" (சேதுபு. முத்தீர். 6). 7. சிறுமை. "முடங்கன் மனாலையமே யினிதாயிற்று" (திருநூற். 30).

முடங்கர் = ஈன்றணிமையில் உண்டாகும் சோர்வு. “குருளை மூன்றுட னீன்ற முடங்கர் நிழத்த " (அகம். 147).

முடங்கி

=

1. நோயாற்கிடையாய்க் கிடப்ப-வன்-வள். 2 .நிலத்தின்

மூலை நீட்டம்.