உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

வேர்ச்சொற் கட்டுரைகள்

முடங்கு முடக்கு = 1. வளைவு. 'பாடகம் ஒரு கம்பியாய்ப் பல முடக்காலே போக்கும் வரவும் உண்டானாற் போல' சீவக. 510, உரை). 2. தெருவின் கோணம். 3. முடக்குமோதிரம், நெளி (நெடுநல். 143-4, உரை), 4. மறைந்து அம்பெய்யும் முடக்கறை (பு. வெ. 5 : 1, கொளு). 5. முடங்கும் நாக்கு. ‘அண்ண மூடெழ முடக்கினை யழுத்தி" (தணிகைப்பு. அகத்தியனருள். 280). 6. முடக்குநோய். 7. தடை. 8. காலத்தாழ்ப்பு. 9. வேலையின்மை.

66

க முடுக்கு.

முடக்கு முடக்கன் = தாழை.(சங். அக.).

முடங்கு - மடங்கு. மடங்குதல் = 1. வளைதல். “படைபோன் முடங்கி மடங்கி” (கலித். 94 : 9). 2. மடக்குதல் (திவா.). 3. கோணுதல். 4. வளைந்து செல்லுதல். 5. மீளுதல் (பிங்.). 6. சொல் திரும்ப வருதல். 7. திருகுருதல் 8. நெளிதல். 9. சுருங்குதல். 10. ஒடுங்குதல் 11. குறைதல். "மடங்கா விளையுள் வயலூர்” (சிலப். 23 : 119). 12. கீழ்ப்படுதல். “காரொலி மடங்...களத்தி னார்த்த பேரொலி" (கம்பரா நா கபாச. 291). 13. தாழ்தல். 14. செயலறுதல். "உழவினார் கைம்மடங்கின்” (குறள். 1036). 15. சினமடங்குதல்.16. நிறுத்தப்படுதல் “மண்டம ரின்றொடு மடங்கும்" (கம்பரா.கும்ப. 267). 17. தடையுண்ணுதல். 18. வாயடங்குதல். 19. ஒருவன் சொத்து இன்னொருவன்பாற் சென்றடைதல்.

மடங்கு = மடி, அளவு. "இருமடங் காக வெய்தும்" (சூளா கல்யா. 165). மடங்கு மடக்கு. மடக்குதல் = 1. வளைத்தல். 2 .மடித்தல். “வால்விசைத் தெடுத்து வன்றாண் மடக்கி" (கம்பரா. கடறாவு. 17). 3. மடித்து உடுத்துதல். "மடக்கினார் புலியின் றோலை" (தேவா. 955:1), 4. திருப்புதல். செய்யுளில் எழுத்துஞ் சொல்லும் அடுத்தடுத்துத் திரும்பத்திரும்ப வருமாறமைத்தல். 5. மாறிமாறிச் செய்தல். 6. வென்று கீழ்ப்படுத்துதல். 7. வாயடக்குதல். 8. கால்நடைகளை விளைநிலத்தில் உரத்திற்காக இராவேளையில் ஒருசேர அடக்கி வைத்தல். 9. பொருள்களைத் தன்வயப்படுத்துதல்.10. பணிவாக்குதல் 11. தடுத்தல். 12. அழித்தல். "மடக்குவா யுயிரை யென்னா" (கம்பரா. கும்பக. 188). மடக்கு 1. வளைவு. 2. மூலைமுடுக்கு. 3. திருப்பு. 4. மடிப்பு. 5. மடக்குக்கத்தி. 6 மாறிமாறி வருகை. 7, செய்யுளில் எழுத்து கொல்சீர் முதலியன அடுத்தடுத்து மீண்டும் மீண்டும் பொருள் வேறுபட்டு வருவதாகிய சொல்லணிவகை. 8. தடுப்பு. 9. தடை.

=

மடக்கு மடக்கம் = 1. வளைவு 2. வணக்கம் 3. பணிவு 4. மனவடக்கம் 5. நோய் திரும்புகை.

மடங்கு - மடங்கல் = 1. வளைகை (திவா.) 2. கோணம்.3.தாழை (அக. நி.) 4. முற்றிவளைந்து சாய்ந்து கதிர். 5. முன்னும் பின்னும் திரும்பி நோக்கிச் செல்வதாகச் சொல்லப்படும் அரிமா. “மடங்கலிற் சீறி மலைத்தெழுந்தார் (பு. வெ.324). 6. அடக்கம். 7. ஒடுக்கம் "மைந்துடை யொருவனு மடங்கலுநீ’ (பரிபா. 144). 8. 'உயிர்களைக் கவருங் கூற்றுவன்' "மடங்கல்போற் சினைஇ”