உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்' (வளைதற்) கருத்து

83

(கலித். 2. )9. உலகொடுங்கும் ஊழிக்காலம். "மடங்கற் காலை” (கலித்.120). 10. உலகழிக்கும் வடவைத்தீ."மடங்கல் வண்ணங் கொண்ட கடுந்திறல்” (பதிற். 62. 8). 11. ஊழி முடிவு.

முண்டு - மண்டு - மண்டி = காலை முடக்கி முழங்காலால் நிற்கை. "ஒருகால் மண்டியாக...மடித்துவைத்து” (புறம். 80, உரை). மண்டிபோடுதல், மண்டியிடுதல் என்னும் வழக்குகளை நோக்குக.

முட்டு -மட்டு - மட்டி.

மட்டித்தல் = (செ. கு.வி.) மண்டலித்தல், வட்டமாதல்.

(செ. குன்றாவி) வட்டமாக்குதல். “திரடோள்கண் மட்டித்தாட" (தேவா. 12:3). மண்டு - மண்டலம் = 1. வட்டம் (பிங்.), “சுடர்மண்டலம்” (திருநூற். 80). 2. வட்டவடிவம் (திவா.) 3. கதிரவனையுந் திங்ளையுஞ் சுற்றித் தோன்றும் கோட்டை (பரிவேடம்). 4. கதிரவன் பரிப்பு (கிராந்தி வீதி). 5. பாம்பின் சுற்று. "மண்டலம் பயிலுரகர்" (பாரத. குருகுல.3). 6. வட்டவடிவான அல்லது சக்கரவடிவான படையமைப்பு (குறள். 767 உரை). 7. நாட்டின் பெரும்பகுதி. "சோழமண்டல மீதே" (திருப்பு. 94). 8. வானவெளிப் பகுதி. முகில் மண்டலம் 9. நாட்டின் சிறுபகுதி. ஊர் (பிங்.). 10. மந்திரச் சக்கரம் 11. மண்டில நிலை (பிங்.). 12. நாற்பது அல்லது நாற்பத்தைந்து நாள் கொண்ட மருத்துவக் காலவட்டம். 13. குதிரைச்செலவு வகை. "பண்ணிய வீதிபற்றி மண்டலம் பயிற்றி னானே" (சீவக.795). 14. நடுவிரல் நுனியும் பெருவிரல் நுனியுங் கூடி வளைந்திருக்க, மற்ற விரல்களும் ஒக்க வளைந்து நிற்கும் இணையாவினைக்கை. (சிலப். 3,18, உரை). 15. வில்லோர் நிலையுளொன்று (சூடா.). 16. மேலுலகம், பரமண்டலம். மண்டலம் வ. மண்டல.

மண்டலம்

-

மண்டலி. மண்டலித்தல் - 1. வளைத்தல் 2. பாம்பு முதலியன வட்டமாகச் சுற்றியிருத்தல். 3. வில்லாளி காலை வளைத்து வட்டமாக்குதல். 4. இறுதியடியின் அல்லது இறுதிப் பாட்டின் இறுதி எழுத்து அசை சீர் என்பவற்றுள் ஒன்று, முதலடியின் அல்லது முதற்பாட்டின் முதல் எழுத்து அசை சீர் என்பவற்றுள்ஒன்றாய் வருமாறு, செய்யுளிசைத்தல்.

மண்டலம்

66

-

மண்டலி மடலி. மடலித்தல் = மடங்கித் திரும்புதல் (யாழ். அக.). மண்டிலம் = 1. வட்டம். 2. வட்ட வடிவம். 3. வட்டக் கண்ணாடி. “மையறு மண்டிலம் போலக் காட்ட" (LD 600F COLD. 25:137). 4. கதிரவன். "பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு" (பெரும்பாண். 442) 5. திங்கள். "செய்வுறு மண்டிலம்" (கலித். 7). 6. ஞாலம். "கடல்சூழ் மண்டிலம்" (குறுந். 300). 7. கதிரவனையுந் திங்களையுஞ் சுற்றிடப்படும் கோட்டை (பிங்.). 8. வட்டமாயோடுகை. “செலவொடு மண்டிலஞ் சென்று" (பு. வெ. 12, வென்றிப். 14.) 9. குதிரைச் செலவுவகை (நாமதீப. 732).10