உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

வேர்ச்சொற் கட்டுரைகள்

வானவட்டம் (பிங்.). 11. நாட்டின் பெரும்பகுதி "மண்டிலத் தருமையும்” (தொல். அகத். 41) 12. நாட்டின் சிறு பகுதி, ஊர் (பிங்.). 13. கூத்தின்வகை.

மண்டிலயாப்பு = நாற்சீரடிச் செய்யுள்.

"ஒத்தா ழிசையும் மண்டில யாப்பும் குட்டமு நேரடிக் கொட்டின வென்ப. "மண்டிலங் குட்ட மென்றிவை யிரண்டும் செந்தூக் கியல வென்மனார் புலவர்.

"2

(தொல். செய். 114)

(தொல். செய். 116)

""

இங்ஙனம் மண்டில யாப்புத் தொல்காப்பியத்திலேயே சொல்லப் பட்டிருத்தலையும் "என்மனார் புலவர்” என்னும் முன்னூல் பலவற்றைக் குறிக்குந் தொடரையும் ஊன்றி நோக்குக;

நிலைமண்டில வாசிரியப்பா, அடிமறிமண்டில வாசிரியப்பா என்னும் அகவற்பா வகைகள், தொன்றுதொட்டு வழங்கி வருவன. தமிழ் யாப்பு முறை முற்றும் ஆரியச் சார்பற்றது.

மண்டில மாக்கள் = நாட்டின் பகுதியை ஆளும் அதிகாரிகள்.

பழஞ் சோழநாட்டின் பிரிவான தொண்டை மண்டலமும், பழஞ் சேர நாட்டின் பிரிவான கொங்கு மண்டலமும் போன்ற பல மண்டலங்கள், முதற்காலத்தில் மண்டில மாக்கள் அல்லது மண்டலிகர் என்னும் அதிகாரிகளாலேயே ஆளப்பட்டு வந்திருத்தல் வேண்டும். அவர்கள் அரச குடும்பத்தினராகவோ, உழுவித்துண்ணும் வேளாண் தலைவராகவோ, குறுநில மன்னராகவோ, தண்டத் தலைவராகவோ இருந்திருக்கலாம்.

எண்ணூற்றுக் காவத அளவு முழுகிப்போன பழம் பாண்டிநாடான "செந்தமிழ் வழக்கொடு சிவணிய நிலமும்" பனிமலைவரை பரவியிருந்த பழஞ் சேர சோழ நாடுகளும், இருந்த முதுபழங்காலத்தில், முத்தமிழ் வழங்கிய முந்து தமிழகம் எத்துணையோ மண்டலங்களாகப் பகுக்கப்பட்டு மண்டலிகரால் ஆளப்பட்டு வந்திருத்தல் வேண்டும்.

பாண்டியன் குடிப்பெயர்களுள் ஒன்றான பஞ்சவன் என்னுஞ் சொல், முதலிரு கழகக்கால அல்லது தலைக் கழகக்காலப் பாண்டியர், துணையரையர் (அல்லது மண்டலிகர்) ஐவரைக் கொண்டு நாடாண்ட மையை யுணர்த்தும்.

"பஞ்சவ னீடு கூனும்” என்று 15ஆம் நூற்றாண்டு அருணகிரிநாதர் பாடியதுபோன்றே, "பழியொடு படராப் பஞ்சவ வாழி” என்று 2ஆம் நூற்றாண்டு இளங்கோவடிகளும் பாடியிருத்தல் வேண்டும்.

அஞ்சவன் என்னுஞ் சொல்லே, பிற்காலத்தில் வடமொழியிலும் தென்மொழியிலும்பஞ்சவன் என்று திரிந்ததாகத் தெரிகின்றது. (கை-ஐ- ஐயது-ஐது-ஐந்து-ஐந்தவன்-ஐஞ்சவன்-அஞ்சவன்-பஞ்சவன்.)