உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்' (வளைதற்) கருத்து

85

ஒ.நோ: அப்பளம்-தெ. அப்படமு, க. பப்பள-ம. பப்படம்-வ. பர்ப்பட்ட. அப்பளக்கட்டையால் மாவை அப்பளித்தமைப்பது அப்பளம்.

முண்டு, மண்டு, மண்டி, மண்டலம் மண்டலிகன், மண்டலித்தல், மண்டிலம் முதலிய சொற்கள் மேலையாரிய மொழிகளில் இல்லை.

Mandalin (Dim.Mandolinde) என்னும் இத்தாலிய நரப்பிசைக் கருவிப் பெயரும், மண்டலியாழ் என்னும் தென்சொல்லின் திரிபாய் இருத்தல் வேண்டும்.

தமிழின் தென்மை, தொன்மை, முன்மை முதலிய தன்மைகளை நடுநிலையாக ஆராய்ந்தறிந்தவர்க்கு, மேற்கூறியவையெல்லாம் வெள்ளிடை

மலையாம்.

முண்டு-முண்டி-முடி. முடிதல்=வளைத்து அல்லது சுற்றிக் கட்டுதல். முடித்தல் = 1. கூந்தலைக் கட்டுதல். “பாஞ்சாலி கூந்தன் முடிக்க" (திவ். பெரியதி. 6 : 7 : 8) 2. பூமாலை கொண்டையிற் கட்டி யணிதல். “கைபுனை கண்ணி முடித்தான்" (கலித் 107 : 15).

முடி = 1. பறவை பிடிக்குங் கண்ணி (noose). 2. கட்டு. மொட்டைத் தலைக்கும் முழங்காற்கும் முடிபோடுதல் (உ.வ). 3. முடிச்சு (knot). “கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்” (மதுரைக் 256). 4. உச்சியில் முடிக்கும் மயிர்க்கட்டு வகை (திவா.). 5. நாற்றுமுடி. "வழிமுடி நடுநரும்" கல்லா. (45:14)

முடி-முடிச்சு = 1. கட்டு. முடிச்சவிழ்த்தல். 2. மயிர்முடி 3. சிறுமூட்டை மூட்டை முடிச்சு. 4. உள்நார் சுருண்ட கட்டை. முண்டும் முடிச்சுமாயிருக்கிறது. முடி முடிப்பு = கிழி, பணமுடிப்பு.

முடி-மடி. மடித்தல் = மடக்குதல். சேலையை மடித்தல்.

3.

மடி = 1. மடிப்பு. மடித்த சேலை. 2. மடங்கு. இருமடியாகு பெயர். மடித்த அரையாடைப் பை (lap). 4. ஆவின் பான்முலை. 5. முடங்கித் தூங்கும் சோம்பல். "மடியென்னும் மாசூர” (குறள். 601). 6. கட்டுக்கிடைச் சரக்கு, மடியரிசி. 7. கட்டுக்கிடைச் சரக்கு வீச்சம், மடிநாற்றம். 8. தூய்மையின்மை. மடியாயிருக்கிறேன்.

-

மடி மடிப்பு = 1. வளைப்பு. 2. திரைப்பு