உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்® - (துளைத்தற் கருத்து வேர்)

முல்-மூல் மூலம் = துளைவழி. வழி, வாயில். காவிரிநீர் குழாய் மூலமாகக் கொண்டுவரப்படும், பொத்தகம் அஞ்சல் மூலம் அனுப்பப்படும், வருமான வரியைக் கணக்கர் மூலம் செலுத்தினேன்.

மூலம் - மூலியம் = வாயில். யார் மூலியமாய்ச் செய்தி தெரிவித்தாய்? (2.61.).

=

முல்-முள்-முள்கு. முள்குதல் உட்செல்லுதல். "அமர்க்க ணாமா னருநிற முள்காது" (நற். 165).

முள்-முண்-மண். மண்ணுதல் = 1. முழுகுதல். “பனிக்கய மண்ணி” (புறம். 79). 2. நீராடுதல். "குடுமி கொண்ட மண்ணுமங் கலமும்” (தொல். புறத். 13). 3. கழுவுதல் “மண்ணி மாசற்றநின் கூழையுள்" (கலித். 107).

மண்ணுறுத்தல் = 1. மஞ்சன மாட்டுதல். “வார்க்கோல மாலை முலையார் மண்ணுறுப்ப வாடி” (சீவக. 2352). 2. கழுவுதல். (திருமுருகு. 25, உரை).

முள்-மூள் - மூளி = 1. துளையுள்ளது. 2. துளையறுந்தது. 3. உறுப்பறை. 4. உறுப்புக் குறை. "சூர்ப்பணகையை மூளியாக்க" (இராமநா. உயுத். 26). 5. உறுப்புக் குறையுள்ள பொருள். எல்லாம் மூளியும் காளியுமாய்க் கிடக்கிறது (உ.வ.). 6. குறைவுள்ள கருமம். அவன் வராமையால் அந்தக் கருமம் மூளியாய்ப் போயிற்று. 7. காதணி யில்லாதவள். 8. பெண்ணைக் குறித்த ஒருவகைச் சொல். 9. பெண்ணைக் குறிக்கும் பொதுச்சொல். "ஒரு நாழியாலும் வரும், ஒரு மூளியாலும் (மூழியாலும்) வரும் (பழ.) வீட்டிற்கு ஆக்கம் அளக்கும் நாழியாலும் வரும்; வந்த மருமகளாலும் வரும். மூளிக்காது = 1. அணியில்லாக் காது. 2. அறுபட்ட காது.

=

ஒரு

மூளிக்காதி = காதணியில்லாதவள், ஒரு வசைச்சொல், ஆயின், கிழவியரைத் தாக்காது.

மூளிக்குடம் = ஒரு மருங்கு வாயுடைந்த குடம்.

மூளி நாய்

=

காதறுபட்ட நாய்.

மூளியுதடு = பிளந்த வுதடு.

மூளியோடு = சிதைந்த ஓடு.