உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்® (துளைத்தற் கருத்துவேர்)

87

மூளி-மூழி = 1. உட்குழிந்த அகப்பை (திவா.). 2. நீர்க்கலம். “மயிற் பீலியோடு மூழிநீர் கையிற் பற்றி" (பெரியபு. திருஞான. 601). 3. நீர்நிலை (பிங்.). 4. துழாவிக் கடையும் மத்து (W.). மூழிவாய்-பூக்கூடை. “மூழிவாய் முல்லை மாலை (சீவக. 833).

99

மூள் - மூளை

1. எலும்பின் உள்ளீடு. 2. மண்டையின் உள்ளீடு. "மூளையார் சிரத்து" (திவ். பெரியதி 4 : 2 : 8). 3. மதி. அவனுக்குச் கொஞ்சங்கூட மூளையில்லை (உ.வ.).

ம, மூள. ஒ.நோ; வ. மஜ்ஜா.

OE. mearg, OS., OHG. marg, ON. mergr, E. marrow.

முள்-முழ-முழுகு. முழுகுதல் = 1. குளித்தல். 2. அமிழ்ந்துபோதல். கப்பல் முழுகிவிட்டது. 3. வினைமுயற்சியில் அழுந்தி யிருத்தல். 4. தீர்க்க முடியா அளவு கடன் மிகுதல். அவன் கடனில் முழுகிவிட்டான். ம. முழுகுக, க. முழு, முழுகு, தெ. முனுகு (g).

=

முழுகு-முழுசு. முழுசுதல் உட்புகுதல். "முழுசி வண்டாடிய தண்டுழாயின்” (திவ். பெரியதி. 2 : 8 : 7).

முழுசு-முழுது-முழுத்து. முழுத்துதல் =அமிழ்த்துதல். "துதிக்கை முழுத்திற்று" (ஈடு. 3: 5: 1)

முழுத்து-ழுழுத்துவி. (பி. வி.). முழுத்துவித்தல் = அமிழ்த்துவித்தல். "மன்னவரை....முழுத்து விப்பன் செங்குருதி முன்" (பாரதவெண். 126) . முழுகு-முழுக = முழுவதும். "மதிலு மாடமு மாடகச் செய்குன்று முழுகக் குழாமீண்டி” (திருவாரூ. 142)

முழு-மூழ். மூழ்த்தல் = மூழ்கச் செய்தல். “மூழ்த்த நாளந் நீரை மீனா யமைத்த பெருமானை" (திவ். பெரியதி. 6 : 8:2).

முழுகு -மூழ்கு. மூழ்குதல் = 1. புகுதல். "வான மூழ்கிச் சில்காற் றிசைக்கும்" (மதுரைக். 357) 2. அழுந்துதல். "சுரையம்பு மூழ்க" (கலித். 6). 3 அமிழ்தல். "வேட்கை வெந்நீரிற் கடிப்ப மூழ்கி" (திருவாச. 6 41). 4. தங்குதல். “முளிமுதன் மூழ்கிய வெம்மை தீர்ந்து" (கலித். 16). 5. மறைதல். “வியன்மலை மூழ்கிச் சுடர்கான் மாறிய செவ்வி நோக்கி" (சிறுபாண். 170)

மூழ்க அடித்தல்-மூழ்கடித்தல் = மூழ்கச் செய்தல்.

முழுத்து-மூழ்த்து. மூழ்த்துதல் = ஆழ்த்துதல்.

E. merge.

முழுகு-L. mergo, mergere, F. merger, E.

இதினின்று emerge, submerge முதலிய சொற்கள் பிறக்கும்.

L. mers. இதினின்று immerse, submerse முதலிய சொற்கள் பிறக்கும். முழுகு -முழுங்கு. முழுங்குதல் = (செ. கு. வி.) முழுகுதல்.

(செ. குன்றாவி.). தொண்டைக்குள் அல்லது வயிற்றிற்குள் முழுகச் செய்தல், விழுங்குதல். மடு முழுங்கி = ஒருவகை நெல்.