உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

தெ. மிங்கு.

வேர்ச்சொற் கட்டுரைகள்

முழுங்கு விழுங்கு. விழுங்குதல் = பெரும்பாலும் மெல்லாமலும் வாய்க்குள் வைத்திராமலும் அல்லது பல்லிற் படாமலும் வயிற்றிற்குள் ஒரே யடியாய்ப் புகுத்திவிடுதல்.

ஒ. நோ: முடுக்கு-விடுக்கு, முறப்பு-விறப்பு.

முழுங்கு-முங்கு. முங்குதல்

=

1.நீருள் முழுகுதல். "கிள்ளை....

முங்கியெழும்" (இரகு. தேனு. 14). 2. அமிழ்ந்துபோதல். "முன்னிய வங்க முங்கிக் கேடுற" (மணிமே. 29 : 16). 3. முழுக்கிய நீர்போல் நிரம்பி யிருத்தல். "கொலை முங்குங் கனலிடுமால்" (இரகு. நகரப். 25).

தெ. முங்கு, ம. முங்ஙு.

"

முங்குளிப்பான் (முங்கிக் குளிப்பான்) = நீரில் மூழ்கி யிரைதேடும் உள்ளான் என்னும் பறவை.

முழுகு-முழுக்கு. முழுக்குதல் = முழுகச் செய்தல். "அயில்களும் வாளுந் தோள்களின் முழுக்கினர் (கம்பரா. அதிகாய 98)

க.முழுகிசு (g).

முழுக்கு = 1. குளிப்பு. பல தீட்டுக்கு ஒரு

2. அமிழ்வு.

முழுக்கு (உ.வ.).

66

முழுக்காடுதல் = எண்ணெய் தேய்த்துக் குளித்தல். “எண்ணெய் சேர்த்தே முழுக்காடுவார்" (அறப். சத. 50).

க.முழுக்காடு.

முழுக்காட்டுதல்

=

எண்ணெய்க் குளிப்புச் செய்வித்தல்.

“கடல்வேந்தை யவன்புனலான் முழுக்காட்டு முறைமை யென்கோ சௌந்த. 103).

முழுக்காளி =1. முத்துக் குளிப்போன் (W.). 2. இழவிற்குக் குளிக்கவேண்டிய நெருங்கிய உறவினன்.

=

முழுகவிடுதல் = 1. பொருள் தொலையும்படி விடுதல். 2. அடைவு வைத்த பொருளை மீட்க முடியாதிருத்தல்.

முழுகாமலித்தல் = கருவுற்றிருத்தல். அவன் மனைவி மூன்று மாதம் முழுகாமலிருக்கிறாள்.

=

முழுகிக் கிடத்தல் 1. நீரில் அமிழ்ந்திருத்தல். அடைமழையினாற் பயிர் முழுகிக் கிடக்கின்றது (உ.வ.). 2. கடலடியிற் கிடத்தல். பன்மலை யடுக்கக் குமரிக்கோடு இந்துமாவாரியில் முழுகிக் கிடக்கின்றது. 3. முழுவதும் முடங்கிக் கிடத்தல். அவன் சொத்து முழுதும் வணிகத்தில் முழுகிக் கிடக்கின்றது (உ.வ.). 4. ஆழ்ந்து ஈடுபட்டிருத்தல். அவன் காமக் களியாட்டில் முழுகிக் கிடக்கிறான்.