உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்® (துளைத்தற் கருத்துவேர்)

89

முழுகிப்போதல் = 1. அமிழ்ந்து போதல். நேற்று வந்த பெருவெள்ளத் தில் ஊர் முழுதும் முழுகிப் போயிற்று (உ.வ). 2. அடியோடு கெடுதல். சூதாட்டினால் அவன்குடி முழுகிப் போயிற்று (உ.வ.). 3. அடைவு வைத்த சொத்து மீட்க முடியாவாறு கடனுக்கு உட்பட்டுவிடுதல். அவன் அடைவுவைத்த நிலம் முழுவதும் முழுகிப் போய்விட்டது (உ.வ.).

முழுக்கு-முக்கு. முக்குதல் = 1. நீருள் முழுகுவித்தல். "தீர்த்தம். அதிலெனை முக்கி யெடுத்து" (தணிகைப்பு நந்தி.60). 2. தலைமறைய (முழுகு) நீர்மட்டம் உயர்தல் அல்லது நீராழம் மிகுதல். நடு ஆற்றிற் போகும் போது தண்ணீர் அவனை முக்கிவிட்டது (உ.வ.).

முக்கு-முக்குவன் = நுளையன், முத்துக் குளிப்பவன் அல்லது நீருள் முழுகி அல்லது வலையை நீரில் முக்கி மீன் பிடிப்பவன் (?)

கடல் முக்குவன் = கடல் மீன் பிடிப்போன். முக்குவர் இலங்கையிலும் பழஞ்சேர நாடாகிய கேரளத்திலும் உள்ளனர். சேரநாட்டு முக்குவர் ஈழவருடனும் முகவருடனும் லங்கையினின்று வந்ததாகச் சொல்லப்படுவர் என்று, குண்டர்ட்டு தம் மலையாள-ஆங்கில அகரமுதலியிற் கூறுவர்.

முக்குளித்தல் (முங்கிக் குளித்தல்) = முழுகுதல். "இரைகவர் ஞெண்டு முக்குளித்தூறு மளறு கிடங்கில்" (திருச்செந்.பிள்ளை. செங்கீ. 10)

தெ. புக்கிளிஞ்சு. (pukkulintsu).

முக்குளிப்பான் (முங்குளிப்பான்) = உள்ளான் என்னும் சிறிய நீர்ப்பறவை வகை.

முழு முகு-முக முகத்தல்

=

1. (நீரைக் குழித்தல் அல்லது துளைத்தல்போல) மொள்ளுதல். 2. நீர்ப்பொருளையுங் கூலப் பொருளையும் கலத்தால் அல்லது படியால் மொண்டளத்தல், முகத்தலளவை. 3. தாங்கி யெடுத்தல். “முகந்துயிர் மூழ்கப் புல்லி” கம்பரா. கும்பகர்ண. 129). 4. விரும்பு தல். “மூர்க்கரை மூர்க்கரை முகப்பர்" (நல்வழி, 24).

க. மொகெ (g).

முக-மோ. மோத்தல் = மொள்ளுதல் (தைலவ. தைல.)

முக-முகவை = 1. மொண்டுகொள்ளுதல். 2. முகத்தலளவை. 3. நீர் முகக்குங் கருவி. “கயிறுகுறு முகவை” (பதிற். 22:14). 4. அகப்பை (W) 5.மிகுதியாகக் கொடுக்கப்படும் பொருள். "புகர்முக முகவை" (புறம். 371). 6. நெற்பொலி.

"

முகவைப் பாட்டு = களத்திற் சூடடிக்கும்போது பாடும் பொலிப்பாட்டு "பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்" (சிலப். 10: 137). "முகக்கக் கொடுத்தலின் முகவையாயிற்று (மேற்படி, உரை).