உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

வேர்ச்சொற் கட்டுரைகள்

முக-முகில் = 1. கடல் நீரை முகந்து கொள்ளுவதாகக் கருதப்பட்ட மழைவான். “கனையிருள் வானங் கடன்முகந்து” (கலித் 145). “முகிலுரிஞ்சுஞ் சூழி " (பு.வெ. 6:22). 2. திரள் (பிங்).

க. முகில் (g), தெ. மொகுலு (g)

முழு முழை. முழைத்தல் = துளைத்தல், “முழைத்த வான்புழை" (பாரத. காண்டவ. 17).

முழைதல் = நுழைதல் (உ.வ.).

முழை = 1. குகை. "அவ்விசை முழையேற் றழைப்ப” (பரிபா. 19 :63).. 2. துளைத்தல்போல் துழாவும் துடுப்பு (W.).

முழை-முகை

2. மிடா (பிங்.).

=

குகை. "கன்முகை வயப்புலி” (ஐங்.246).

ஒ. நோ : குழை - குகை.

-

முழை முழைஞ்சு = 1. துளை. “குழன் முழைஞ்சு களினூடு குமிழ்த்து” (திவ். பெரியாழ். 3:6:11). 2. குகை. “மாரி மலைமுழைஞ்சில் மன்னி” (திவ்.திருப்பா. 23).

=

முழை-மூழை 1. குழிந்த இடம். "குன்றையம் மூல மூழைவாய் வைத்து" (கம்பரா மருத்து. 116). 2. உட்குழிந்த அல்லது சமைத்த உணவை முகக்கும் அகப்பை. "மூழை சுவையுணரா தாங்கு” (நாலடி. 321). 3. துழாவிக் கடையும் மத்து (சது.).

முள்-மள்-மடு = 1. ஆற்றிடைப் பள்ளம், "ஆறிடு மேடும் மடுவும்போ லாஞ்செல்வம்" (நல்வழி, 32). 2. அருவி விழும் பள்ளநீர்க் குண்டு. மலைக்கும் மடுவுக்குமுள்ள வேற்றுமை (உ.வ.). 3. ஆற்றிடைக் குட்டை. "கங்கை வருநீர் மடுவுள்" (திருவாச. 6 : 26). 4. ஆவின் பால்மடி.

மடுவங்கரை = குளக்கரை.

மடுத்தல் = வாயில் வைத்தல், உண்ணுதல். “மடுத்தவ னஞ்சமுதா” (தேவா.238 : 3). 2. விழுங்குதல். "வரவர வாய்மடுத்து" (நீதிநெறி 64) 3. ஊட்டுதல். “ஒண்டொடி மகளிர் மடுப்ப" (புறம். 56). 4. நிறைத்தல் (W). 5. சேர்த்தல். "பிணக்குவை கொண்டோடிக்....கடல் கங்கை மடுத்திடை தூராதே" (கம்பரா. குகப். 21). 6. அடக்கிக்கொள்ளுதல். "மடுத்து மாமலை யேந்தலுற்றான். (தேவா. 823 : 10). 7. உட்புகுத்துதல். குத்துதல். “கூர்நுதி மடுத்தத னிறஞ்சாடி” (கலித். 52: 3). 8. அமிழ்த்துதல். “ஞான வாரி மடுத்து” (சி .சி .8 : 16), 9, உட்செலுத்துதல். "மதியொடு பாம்பு மடுப்பென்” (கலித். 144: 21), 10. மோசம்பண்ணுதல். அவனை மடுத்துவிட்டான் (இ.வ.)

மடுவிடுதல் = 1. ஆற்றில் மடுவுண்டாதல். 2. கன்றைத் தாய்ப்பால் குடிக்க விடுதல்.

க.மடு.