உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

,

திணை என்பது, திரட்சியைக் குறிக்கும் திண்ணை என்னுஞ் சொல்லின் தொகுத்தல் திரிபு (விகாரம்). அது முறையே, திரண்ட குழுவையும், பெருங் குழுவான குலத்தையும், குலத்திற்குச் சிறந்த ஒழுக்கத்தையும், குலம் போன்ற பாகுபாட்டையும், ஐவகை மரபினர் வசித்த நிலவகையையும் அவற்றின் செய்திகளையும் குறிப்ப தாயிற்று.

பழங்காலத்தில், ஒருவர் இன்னொருவருக்குக் கொடுக்குங் கொடையை உறுதிப்படுத்துவதற்கு, கொடுப்பார் கொள்வார் கையில் நீரை வார்ப்பது வழக்கம். இதற்குத் தாரைவார்த்தல் என்று பெயர். இத் தொடர் இன்று வடார்க்காட்டு வழக்கில் ஒருவன் ஒரு பொருளைத் தொலைத்துவிடுவது, அதைக் கொடுத்துவிடுவதுபோ லிருத்தலால், அதுவுங் கொடைச் சொல்லாற் குறிக்கப்பட்டதென்க.

4. வரையறுப்பு (Restriction)

பல பொருட்குப் பொதுவான சொல்லை அவற்றுள்ள ஒரே பொருளில் வழங்குதல் வரையறுப்பாகும்.

பிள்ளை என்னும் பொதுப்பெயரை வேளாளர்க்கு மட்டும் குலப்பட்டமாக வழங்குவதும், ஆண்பிள்ளையை அல்லது பெண்பிள்ளையை மட்டும் குறிக்க ஆள்வதும், கறி' என்னும் பொதுச் சொல்லால் ஊன்கறியை மட்டும் உணர்த்துவதும்; குட்டி என்னும் இளமைப் பெயரை ஆடும் மக்களுமாகிய ஈரினத்திற்குமட்டும் சிறப்பாய்ப் பயன்படுத்துவதும்; வரையறுப்பிற் கெடுத்துக்காட்டாம்.

யாம் நாம் என்னும் இரு பன்மைப் பெயர்களுள், முன்னதைத் தனித்தன்மைக்கும் பின்னதை உளப்பாட்டுத் தன்மைக்கும், வகுத்துக் கொண்டதும் ஒருவகை வரையறுப்பே.

சில பொதுச் சொற்கள் ஆள்வான் கருத்தின்படி உயர்ந்த பொருளையோ தாழ்ந்த பொருளையோ மட்டும் குறிக்கும். குலமகன் குலமகள் என்னும் தொடர்களின் முதற்சொல் உயர்குலத்தையே குறித்தல் காண்க.

சில பொதுச் சொற்கள், நற்பொருள் தீப்பொருள் ஆகிய இரண்டில் ஒன்றைமட்டும் உணர்த்தும். ஒழுக்கம் செய்கை குணம் மணம் என்பன நற்பொருளிலும், கருமம் காரியம் வினை நாற்றம் வீச்சம் என்பன தீப்பொருளிலும் உலக வழக்கில் வழங்கும். கருமம்

இது Meat என்னும் ஆங்கிலச் சொல்லையொத்தது.