உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

ஆசையின்மையை யுணர்த்தும் விராகம் என்னும் வட சொல்லின் திரிபாகு பெயரான (தத்திதாந்தமான) வைராக்கியம் என்னும் சொல் விடாப்பிடியை யுணர்த்துதல் காண்க. ஆசை யிருப்பின் விடாப்பிடி யிராதென்பதும், அஃதில்லாவிடின் விடாப்பிடி யிருக்குமென்பதும், இச் சொல்லால் அறியக் கிடக் கின்றன.

9. அண்டின உயிரைக் காத்தல்

அடைக்கலங் காத்தல் உயர்ந்தோர்க்குச் சிறந்த அறமாகும். பழந்தமிழரும் ஆப்பிரிக்க மூர் வகுப்பினரும் இவ் வறத்தைக் கடைப்பிடித்து வந்தனர்.

இ டைந்தவர்க் கபயம் யாமென் றிரந்தவர்க் கெறிநீர் வேலை கடைந்தவர்க் காகி ஆலம் உண்டவர்க் கண்டி லீரோ

உடைந்தவர்க் குதவா னாயின் உள்ளதொன் றீயா னாயின்

அடைந்தவர்க் கருளா னாயின் அறமென்னாம் ஆண்மை என்னாம்" (கம்பரா. விபீண. 4, அடை : 111)

என்று கம்பர் கூறுவது தமிழர் அறமே.

அடைந்தவர் மக்களாயின், அவர் தம்மால் அடையப் பட்டவரிடம் அடைக்கலம் வேண்டிப் பெறுவர். ஆனால், வாயில்லா அஃறிணை யுயிரிகள் எங்ஙனம் பேசும்? எங்ஙனம் வேண்டும்? இவ் வெளிய நிலையுணர்ந்தே, இல்லங்களை யடுத்து வாழும் சிற்றுயிரிகள் கொல்லும் ஆற்றல் வாய்ந்தனவாயினும், மக்கள் அவற்றைக் கொல்வதில்லை.

நல்லபாம்பு போன்றே அரணையும் நச்சுநீர் உடையது. ‘அரணை தீண்டினால் மரணம்' என்பது பழமொழி. ஆயினும், மக்கள் அதைக் கொல்வதில்லை; அதுவும் ஒன்றும் செய்வதில்லை.

வீட்டையடுத்து வாழும் நல்லபாம்பும் பேணி வளர்க்கப் படின், அல்லது பாதுகாக்கப்படின், தீங்கு செய்யாதிருத்தலும், பலவிடத்தும், சிறப்பாக மலையாள நாட்டில் காண்கிறோம்.

வீட்டு முகட்டிலும் கூரையிறப்பிலும் கூடுகட்டி வாழ்வது அடைக்கலான் குருவி. "பிறப்பிறப்பிலே” என்றார் காளமேகரும். சிறுவரும் எளிதாய்ப் பிடித்துத் தீங்கிழைக்கும் வண்ணம், இக் குருவிகள் தாமாக வந்து இல்லங்களிற் கூடுகட்டி வாழும். பெரியோர் இவற்றைக் காவாவிட்டால் இவற்றிற்கு வாழ்க்கையில்லை. இதை யுணர்ந்த பெரியோர் இவற்றிற்கு அடைக்கலான் எனப்