உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஒழுக்கவியற் சொற்கள்

99

பெயரிட்டனர். இவை இல்வாணரை அடைக்கல மடுத்ததென்பதும், இவற்றைக் காத்தல் அவர் கடமை என்பதும், இச் சொல்லாற் குறிக்கப்படும் கருத்தாகும்.

10. தலைவன் ஒழுக்கம்

எக்கூட்டத்தையும் நடத்தும் தலைவனுக்கு ஒழுக்கம் இன்றி யமையாததாகும். இக் கடமையை இக்காலத்தார் கவனிப்பதில்லை; உணர்வதுமில்லை. தலைவன் செம்மையா யிருந்தால்தான் அவனைப் பின்பற்றுவோரும் செம்மையாயிருப்பர். பிறர் ஒன்றைச் செய்ய வேண்டுமென்று சொல்லுகிறவன் அல்லது விரும்புகிறவன் தானு ம் அதைச் செய்யவேண்டும். சொல்லுகிறவன் முந்திச் செய்தால்தான் கேட்போரும் பிந்திச் செய்வர். “சொல்வதெளிது; செய்வது அரிது.’ சொல்வதைச் செய்து காட்டினால்தான் சொல் வலியுறும்; கேட்போரும் கைக்கொள்வர். பெரியோரைப் பின்பற்றுதலே சிறியோர் இயல்பாதலின், பெரியோரும் தலைவரும் தகாச் செயலை நீக்கித் தக்க செயலையே செய்தல் வேண்டும்.

தலைவனுக்குரிய பெயர்களுள் செம்மல் என்பது ஒன்று. இது செம் 3 என்னும் சொல்லினின்று திரிந்தது. செம்மையாய் ஒழுகுபவன் செம்மல். இச்சொல்லால், எத்தலைவனுக்கும் ஒழுக்கம் இன்றியமை யாதது என்பது பெறப்படும். ஒழுக்கத்தில், சிறியோர் பெரியோரைப் பின்பற்ற வேண்டுமென்னுங் கருத்துப்பற்றியே, பிறர்க்கு ஒல்லும் வகையில் செல்லும் வாயெல்லாம் நன்மை செய்தற்கு, ஒப்புரவு (அல்லது ஒப்புரவொழுகல்) என்று பெயர்." அலங்கரித்தலை ஒப்பனை செய்தல் என்பதும் இக் கருத்துப் பற்றியே.

11. சிறந்த விருந்து

ம்

கு

உறவினரையும் நண்பரையும் பேணுதலும் அவர்க்கு விருந்தளித்தலும் இல்வாழ்வான் கடமையெனினும், புதுமையாய் வந்தோர்க்கு விருந்தளித்தலே சிறப்பாம். விருந்து என்னும் சொல் முதலாவது விரும்பிச் செய்யும் வேளாண்மையைக் குறிக்கும். பின்பு

3. பண்புச் சொற்களை 'மை' விகுதி கொடுத்துக் கூறுவது இலக்கணவாசிரியர் வழக்கு. அவ் விகுதியின்றிச் சொல்லை மட்டும் கூறுவது மொழிநூலாசிரியர் வழக்கு எனவறிக.

4.

'இம்மைச் செய்தது மறுமைக் காமெனும், அறவிலை வாணிகன் ஆயலன் பிறரும், சான்றோர் சென்ற நெறியென,

ஆங்குப் பட்டன் றவன்கை வண்மையே’

(புறம்.134)

என்றார் உறையூர் மோசியார்.