உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

சிறப்பும் நோக்கி அவர்கட்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உரிமை அல்லது ஒழுக்கவிதித் தளர்ச்சியினாலும், அவர்கள் பிறர்பொருளை விரும்பியவிடத்து அவரைக் கேளாமலே எடுத்துக்கொள்வது வழக்கம். இதற்குத் தாராளம் என்று பெயர். தார் என்பது சேனை. ஆளம் என்பது ஆளின் தன்மை. தாராள், படைஞன், தாராளம் ஒருவரைக் கேளாமலே அவர் பொருளை எடுத்துக்கொள்ளும் படைஞன் இயல்பு. ஒருவர்க்குரிய இடத்தில் அவரைக் கேளாமற் புகுவதும் தாராளம் எனப்படும். பொருளை வௌவுவதும் உரிமையை வெளவுவதும் ஒன்றே.

16. மங்கல வழக்கு

ஒருவர்துன்புறும்போது, அவரை ஆற்றித் தேற்றுவதும் அவரொடு தாமும் சேர்ந்து துன்புறுவதும், உயர்ந்தோர் இயல்பு. கண்ணன்ன கேளிரை இழப்பதும், எரிபோன்ற வறுமையால் வாடுவதும் பெருந்துன்பமாம். அத் துன்பங்களை அவற்றிற்குரிய சொல்லாற் குறிப்பினும் அவற்றால் துன்புறுவோர்க்குத்துன்பம் பெருகுமென்று கருதி, இன்பமும் நன்மையும் குறிக்கும் சொற்களால் அவற்றைக் குறித்து வந்தனர் பண்டை மேலோர். இதனை மங்கல வழக்கென்பர் இலக்கண வாசிரியர்.

,

செத்தானைத் துஞ்சினான் என்றும், சாவைப் பெரும்பிறிது என்றும், சுடுகாட்டை நன்காடு என்றும், தாலியறுத்தலைத் தாலி பெருகிற்று என்றும், வறுமையை நிரப்பு என்றும், வறுமைப் பாட்டை நல்கூர்தல் என்றும் கூறுவது மங்கல வழக்காம்.

துஞ்சுதல் தூங்குதல், நிரப்பு நிறைவு, நல்கூர்தல் நன்மை மிகுதல்.

இனி, சாவுக்கேதுவான நச்சுயிரிகளையும் மங்கலச் சொல்லாற் குறிப்பது வழக்கம். எ-டு: நல்லபாம்பு.

17. பெரியோரைச் சுட்டாமை

பெரியோரைக் கையினாற் சுட்டுவது அவமதிப்பென்று கருதி அங்ஙனம் செய்வதில்லை. சுட்ட நேர்ந்தவிடத்துக் கையாற் சுட்டாது சொல்லாற் சுட்டுவது வழக்கம். அங்ஙனம் சொல்லாற் சுட்டும் போதும் அவர்கள் இவர்கள் என்னும் படர்க்கைச் சொல்லாலன்றி, நீர் நீங்கள் என்னும் முன்னிலைச் சொல்லாற் சுட்டக் கூடாதென்று