உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஒழுக்கவியற் சொற்கள்

103

கொண்டு, தாங்கள் என்னும் படர்க்கைச் சொல்லாற் சுட்டுவர். அதுவும் நாளடைவில் முன்னிலைத் தன்மையடைந்து விட்ட தென்றும், மிகப் பெரியோர்க்கு அச் சொல் போதாதென்றும் கருதி, மடத்தம்பிரானரை அங்குத்தை யென்னும் படர்க்கைச் சொல்லால் முன்னிலைப்படுத்திக் கூறுவது சிவமட மரபு.

அங்குத்தை (அங்குற்றை) (அங்குற்றை)

யென்பது யென்பது

அவ்விடம்

என்று

பொருள்படும் சொல். தம்பிரானொடு உரையாடுபவர் நீங்கள் என்னும்

பொருளில் இச் சொல்லை வழங்குவர்.