உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்குடும்பமும் குலமும்

முடங்கல் = ஓலைச்சுருள், திருமுகம்.

109

முடங்கு - மடங்கு. மடங்குதல்

=

வளைதல், திரும்புதல்,

அடங்குதல். மடங்கு = மடியளவு, திரும்பிப் பார்த்துச் செல்லும் அரிமா, அதைப்போன்ற கூற்றுவன்.

மடங்கு மடக்கு = மடக்கும் கத்தி, ஒரு சொல் திரும்பத் திரும்ப வந்து பொருள் வேறுபடும் சொல்லணி.

முடம் - முடி - மடி. மடிதல் = வளைதல், மடங்குதல்.

மடி = மடங்கிக் கிடக்கும் சோம்பல், சோம்பேறி, மடிக்கும் ஆடை, அரைமுன் மடித்துக் கட்டும் ஆடைப் பகுதி, மடங்கு, கட்டுக்கிடை, அதனால் உண்டாகும் நாற்றம்.

முல் - முர்- முருகு = பிறைபோல வளைந்த காதணி.

=

முல் - முர் - முறி. முறிதல் = வளைதல், வளைந்து ஒடிதல். முறி- மறி. மறிதல் = மடங்குதல், மறித்தல் = மடக்குதல்.

முறு - முறுகு. முறுகுதல் = திருகுதல். முறுகு - முறுக்கு. முறு - முறை = வளைவு, தடவை (turn).

=

முறு முற்று. முற்றுதல் சூழ்தல். முற்று - முற்றுகை. முற்றுகையிடுதல் = படைகொண்டு பகைவர் நகரைச் சூழ்தல்.

மேற்காட்டிய சொல் வரிசையில் உல் என்பதிலிருந்து உழல் என்பது வரையும் ஒரு குடும்பமாகும். அதனொடு குல் சுல் துல் நுல் புல் முல் என்னும் வழிவேர்கள் மட்டும் சேர்ந்து ஒரு குடும்பமாகும். இவ் வழிவேர் ஒவ்வொன்றினின்றும் திரிந்த சொற்றொகுதி ஒவ்வொரு குடியாகும். முதலிலிருந்து முடிவு வரை எல்லாஞ் சேர்ந்து ஒரு குலமாகும் என அறிக.

உல் என்னும் வேரிலிருந்து முற்றுகை என்னும் சொல்வரையும் எல்லாச் சொற்களும் தொடர்புற்றிருப்பதையும், வளைவு என்னும் ஒரே கருத்தையடிப்படையாகக் கொண்டு அவை தத்தம் பொருளை யுணர்த்துவதையும், உயிரொடு கூடி மொழிமுதல் வரும் எல்லா மெய்களும் அடிவேருடன் சேர்ந்து வழிவேர்களைப் பிறப்பித்தலை யும், பகர முதற் சொல்லின் திரிபாக வகர முதற் சொற்கள் தோன்றுதலையும், மொழிமுதல் உகரத்தின் திரிபாக அகரமும் எகரமும் வருதலையும், எல்லாச் சொற்கும் காட்டப்படும் பொருள்