உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1

அணியியற் சொற்கள்

பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல

சொல்லாற் பொருட்கிட னாக வுணர்வினின் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்”

(நன். 268)

என்று பவணந்தி முனிவர் கூறினாரேனும், அணி செய்யுட்கே சிறப்பாக வுரியது என்பது அவர்கருத்தன்று. சில உடம்புகளில் இயற்கையாய் அழகு அமைந்து கிடப்பதுபோல, வல்லோர் செய்யுள்களிலும் இயல்பாக அணி அமைந்திருக்கும் என்பதே அவர் கருத்தாகும். அஃதாயின், அல்லோர் செய்யுளில் அணி இயல்பாய் அமைந்திராது என்பதும் பெறப்படும். இனி, வல்லோர் செய்யுளில் மட்டுமன்றி, அவர் உரைநடையிலும் அணி அமைந்திருப்பது இயல்பே, ஆகவே, அணியானது செய்யுள், உரைநடை ஆகிய இரண்டற்கும் பொதுவாம்.

பொருளை விளக்குவதும் அழகுபடுத்துவதுமே அணியின் நோக்கமாதலானும், செய்யுளிற் போன்றே உரைநடையிலும் அழகிய கருத்துகள் அமையுமாதலானும், கருத்தின் அழகே அணியாதலானும், உரித்தென்னும் கூற்றில் யாதொரு வியப்புமின்று. இதனாலேயே, தொல்காப்பியத்தில் செய்யுளிற்கு முன்னர், அணியியற்பாற்பட்ட உவமவியல் கூறப்பட்டதென்க.

உரைநடைக் கு ம் அ ணி உ

ஒரு கருத்தைத் தெரிவிக்க ஒரு சொற்றொடரே வேண்டு மென்னும் யாப்புறவில்லை. ஒரு சொல்லாலும் ஒரு கருத்தைத் தெரிவிக்கலாம். ஆகவே, தனிச்சொற்களிலும் அணி அமைதற் கிடனுண்டு.

ம்

அணிகட்கெல்லாம் தாயானதும் தலைமையானது உவமையே யாதலானும், தொல்காப்பியத்துள்ளும் அஃதொன்றே கூறப்படுதலானும், க் கட்டுரையில் பெரும்பாலும் உவமையணிச்