உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

சொற்களே, அவற்றுள்ளும் கவனிக்கத்தக்க ஒரு சிலவே, கூறப்படும்.

1. உயர்திணைப் பொருளுக்கு அஃறிணையுவமம் பெண்ணியல்

ஆடவன் பெண்டு ஆகிய இருபாலருள், பெண்டு மிக மெல்லிய ளாதலின், கொடி எனப்படுவாள். இதனாலேயே, குறிஞ்சி நிலப் பெண்டிற்குக் கொடிச்சி என்று பெயர்.

சுற்றார் வல்லிற் சூடுறு செம்பொற் கழலாற்குக்

குற்றேல் செய்தும் காளையும் யானும் கொடியாளை மற்சேர் தோளான் தன்மரு மானுக் கருள்செய்யப் பெற்றேன் என்னப் பேசினன் வாசங் கமழ்தாரான்’

(சீவக.1057)

என்னுஞ் செய்யுளிற் குணமாலை யென்பவளைக் கொடியாள் என்றார் திருத்தக்கதேவரும்.

இனி, பெண்ணைக் கொடியென உவமையாகுபெயராற் குறிப்பது மட்டுமன்றி, பெண்கொடி என உருவக வாய்பாட்டாற் கூறுவதுமுண்டு.

புல் பூண்டு செடி கொடி மரம் என்னும் ஐவகை நிலைத்திணை (தாவர) உயிர்களுள், பெரும்பாலும் மெல்லியதும் விரைந்து வளர்வதும் ஒரு கொள்கொம்பைப் பற்றிப் படர்வதும் கொடியே. பெண்ணைக் கொடியென்று சொன்னவளவிலேயே, அவள் ஆடவனிலும் மெல்லியள் என்றும், அவனிலும் விரைந்து ம் வளர்பவளென்றும், ஒரு கொழுநனைத் துணைக்கொண்டே வாழ்பவளென்றும், மூன்று பெண்பாற் குணங்கள் குறிப்பா யறியக்கிடக்கின்றன.

கொள்கொம்பு, கொள்நன் என்ற இரு பெயர்களும், கொள் என்னும் சொல்லையே முதனிலையாகக் கொண்டிருப்பதும், முறையே கொழுகொம்பு, கொழுநன் என மருவித் திரிவதும், கவனிக்கத்தக்கன. கொள்கொம்பு என்பதில் கொள்ளுதல் தொழில் கொடியினதாகவும், கொள்நன் என்பதில் அத் தொழில் கணவனதாக வும் கொள்ளப்படும்.

2. மக்கள் உறவும் தொடர்ச்சியும்

மக்கள் தங்களைப் பயிருக்கு அல்லது மரத்திற்கு ஒப்பாகக் கருதிக்கொள்வது வழக்கம். கடவுட் காப்பைக் கருதி, "மரத்தை