உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

9. நோய்

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

உடம்பில் தலைக்குக்கீழ் எங்கேனும் புறப்படும் கொப்புளம், சிலந்திப் பூச்சியின் உடல்போல் திரண்டிருந்தலால், சிலந்தியெனப் பெயர்பெற்றது.'

அம்மைக் கொப்புளம் முத்துப்போன் றிருத்தலால், அதை முத்தென்றே அழைப்பர். அதனால், மாரிக்கு முத்துமாரியம்மன் என்றொரு பெயர் வழக்குமுண்டு.

10. இறப்பு

மக்கள் பிறப்புக் கண்விழிப்பும், அவரது இறப்புக் கண்ணடைப்பும் போன்றது. வாழ்க்கை முழுதும் ஒரு பகல் நடபடிக்கை போன்றதே. பெற்றோர் தம் பிள்ளைகளைத் தம் கண்ணுள்ளபோதே கரையேற்ற வேண்டுமென்று சொல்வது வழக்கம். பகல் முடிந்து இரவு வந்தபின் கண்மூடித் தூங்குவதுபோல, வாழ்க்கை முடிந்த போதும் மக்கள் தம் கண்மூடி விழியாத் துயில்கொள்வர்.

"உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு”

"துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்"

என்றார் திருவள்ளுவர்.

11. அஃறிணைப் பொருளுக்கு உயர்திணை யுவமம்

(குறள்.339)

(குறள். 926)

மக்களுள், மிகக் குள்ளமானவனுக்குக் குறளன் என்றும், சிறிது குள்ளமானவனுக்குச் சிந்தன் என்றும், அளவாக வளர்ந்தவனுக்கு அளவன் என்றும், நெட்டையானவனுக்கு நெடியன் என்றும், மிக நெட்டையானவனுக்குக் கழிநெடியன் என்றும் பெயர். இம் முறையையொட்டிச் செய்யுளடிகளுள் இருசீரடிக்குக் குறள் என்றும், முச்சீரடிக்குச் சிந்து என்றும், நாற்சீரடிக்கு அளவு அல்லது நேர் என்றும், ஐஞ்சீரடிக்கு நெடில் என்றும், அறுசீரும் மேலும் கொண்ட அடிக்குக் கழிநெடில் என்றும் பெயரிடப்பட்டுள்ளன.

இசைத்தமிழ்ப் பாட்டுவகைகளுள் ஒன்று அடிக்குறுமைபற்றிச் சிந்து எனப் பெயர்பெறும். அச் சிந்து வகைகளுள் ஒன்று, நெடியதுங்

7. ஒருவகைக் கட்டியை ஆங்கிலத்தில் cancer என்றும் canker என்றும் அழைப்பர். அது நண்டு போலிருத்தலின், இப் பெயர் பெற்றது.

L. cancer, crab, cancer. tumour named from swollen veins, like crab's limbs

C. O.