உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அணியியற் சொற்கள்

11

குறியதுமாக ஈரடி கொண்டுள்ளமையாலும், நொண்டி நொண்டிச் செல்வதுபோன்ற ஓசையுடைமையாலும், நொண்டிச்சிந்து எனப்படும்.

12. உயர்திணை வினைக்கு உயர்திணை யுவமம்

வாழ்க்கை, ஓரூரிலிருந்து மற்றோரூருக்குச் செல்லும் வழிப்போக்குப் போன்றது. நிலத்தின்மேற் காலால் நடந்து செல்வதுபோல, வாழ்க்கையில் ஒருவன் நினைவு, சொல், செயல் ஆகிய முக்கரணத்தொழிலால் நடக்கின்றான். இதனால் முக்கரண வொழுக்கத்திற்கு நடத்தை அல்லது நடக்கை என்று பெயர். ஒழுக்கம் என்ற சொல்லும் இக் காரணம் பற்றியதே. ஒழுகுதல், நடத்தல். இப் பொருள் இன்று வழக்கற்றது.

8

சீர்தூக்கல் என்பது, முதலாவது, துலைக்கோலில் ஒன்றை நிறுத்தலுக்குப் பெயர். சீர், துலைத்தட்டு; தூக்கல், நிறுத்தல். இன்று, மனத்தில் ஒன்றை நிறுத்தல் போல ஆராய்ந்து பார்த்தலுக்குச் சீர்தூக்கல் என்று பெயர். மனமாகிய துலைக்கோலில், மதிநுட்ப மாகிய வரை அல்லது படியிட்டு, நடுநிலையாகிய நாவினால் நிறுப்பதுபோல ஆராய்தல் சீர்தூக்கல். கொண்டாடுதல் என்பது ஒருபொருளைக் கையிற்பற்றி அல்லது தலைமேற்கொண்டு கூத்தாடுதல். தந்தை தன் குழந்தையையும் பத்தன் தான் வழிபடும் கடவுளுருவையும், கையில் ஏந்தி அல்லது தலைமேற்கொண்டு மகிழ்ச்சியாற் கூத்தாடுதலே கொண்டாடுதல். திருவிழாக் காலத்தில் தெய்வவுருவை அல்லது அதனொடு தொடர்புள்ள ஒரு பொருளைக் கையிலேந்தி அல்லது தலைமேற்கொண்டு கூத்தாடுதல் இன்றும் வழக்கமாயிருப்பதால், விழாச் செய்தலுக்குக் கொண்டாடுதல் என்று பெயர். விழாவிற்கு மறுபெயர் 'கொண்டாட்டம். ’சில விடங்களில் மருளாளியை அல்லது தேவராளனைச் 'சாமிகொண்டாடி' என்பர்.

தெய்வத்தையும் குழந்தையையும் கொண்டாடிச் சிறப்புச் செய்தலும் விரும்பியன கொடுத்தலும்போல, ஒருவரைப் பாராட்டிச் சிறப்பிப்பதும் கொண்டாடுதல் எனப்படும். “குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே" என்னும் பழமொழியில், கொண்டாடும் என்னும் சொல், சொற்பொருளும் அணிப் பொருளும் ஆகிய இரண்டையும் தாங்கிநிற்றல் காண்க.

6

சிற்றூர்களிலும் பேரூர்களிலும் உள்ள சந்தி சதுக்கங்களிலும் அம்பலங்களிலும் திண்டுகளிருப்பதுண்டு. திண்டு, சிறுதிண்ணை.

8. ஆங்கிலத்திலுள்ள conduct என்ற சொல்லும் இக் காரணம்பற்றியதே. L. con, together duco, to lead.