உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

அத் திண்டுகளிற் குறச்சிறுமியர் சோற்றுக்குக் கூத்தாடுவது வழக்கம். அவரைப்போல ஒருவன் சோறில்லாது இடர்ப்படும்போது “அவன் சோற்றுக்குத் திண்டாடுகிறான்”” என்பர்.

இலைவிழுந்து மேவிக்கிடக்கும் சிறு குழிகளையெல்லாம் கிண்டிக்கிளைத்து ஒரு பொருளைத் தேடிப்பார்த்தலுக்கு, இலைப்புரை கிளைத்தல் என்று பெயர். இவ் வழக்கு, ஒருவனை எல்லாவிடமும் துருவித் தேடிப் பார்த்தலையுங் குறிக்கும்.

மிக நுட்பமான அவிநயங்களுடன் நடனஞ்செய்தல் நொறு நாட்டியம் எனப்படும். வேண்டாத நுண்ணிய வினைகளைச் செய்யும் ஒருவனை ‘நொறுநாட்டியம் பிடித்தவன்' என்பர்.

ஒரு கடைகாரன் பேரூதியங் கருதி அளவுக்கு மிஞ்சிய பண்டங்களைக் கடையிற் கொண்டுவந்து நிறைத்தலுக்கு, அங்காடி பாரித்தல் என்று பெயர். அவனைப் போலப் பேராசையினால் ஒருவன் ஆகாத காரியத்தை நம்பி ஆகாயக்கோட்டை கட்டுவதும், 'அங்காடி பாரித்தல்' எனப்படும்.

ஒருவனது முதுகில் அல்லது தலையில், தேள் போன்றதோர் உருவையிட்டு, 'தேள்! தேள்!' என்று கத்தி அவனை அச்சுறுத்தி மகிழ்வது, குறும்பர் வழக்கம். இதற்கு 'இடுதேளிடுதல்' என்று பெயர். இங்ஙனம் பொய்க்காரணங் காட்டி வேறு வகைகளில் ஒருவனைக் கலங்கப் பண்ணுவதெல்லாம், இடுதேளிடுதல் எனவேபடும்.

ஆற்றின் நடுவிலிருந்துகொண்டு அதன் இருகரைகளில் எதனை யடைவதென்று துணியாது இடர்ப்படுபவனைப்போல, ஒரு காரியத்தைச் செய்வதாதவிர்வதா என இருமனமாயிருப்பவனுக்கு இருகரையன் என்று

பெயர்.

பாம்பு வகைகளுள் மங்குணி மழுங்குணி என்பதொன்று. அதற்குத் தலையும் வாலும் வேறுபாடில்லாமல் இருகடையும் ஒத்திருப்பதாலும், தலைப்பக்கமும் வாற்பக்கமும் அது செல்ல முடியுமாதலாலும், அதற்கு இருதலை மணியன் என்று பெயர். பகை நட்பு ஆகிய ஈரிடத்தும் சென்று ருசாரார்க்கும் நல்லவனாக நடிப்பவன், இருதலைமணியனை ஒத்திருத்தலால், அவனையும் அப் பெயரால் அழைப்பர்.

9. தாளம் போடுதல், சிங்கியடித்தல் எனும் இழிவழக்குகளும் இத்தகையவே. சிங்கி தாளம்.