உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அணியியற் சொற்கள்

13. அஃறிணைப் பொருளுக்கு அஃறிணை யுவமம்

13

சங்கினாற் குழந்தைகட்குப் பால் ஊட்டுவதால் அதற்கு ஊட்டி என்று பெயர். மக்களின் கழுத்தில் முன்புறத்துள்ள சங்குபோன்ற புடைப்பும் ஊட்டி எனப்படும்; சங்கு எனவும் படும்.

குருகு என்பது நாரை,

கொக்கு முதலிய நீர்ப்பறவைப்

பொதுப்பெயர். கொல்லன் உலைத்துருத்தி, கொக்கும் நாரையும் போன்ற வடிவாயிருப்பதால், அதனையும் குருகு என்பது செய்யுள் வழக்கு.

“ஊதுலைக் குருகின் உயிர்த்தனள் உயிர்த்து”

(சிலப். 22:152)

என்றார் இளங்கோவடிகள்.

ஆற்றிடைக்குறை, கொல்லன் துருத்திபோல முன்குவிந்தும் பின் விரிந்துமிருப்பதால், அதையும் துருத்தி என்பர் புலவர்.

தவளையினத்தில் ஒருவகை, கருங்கல்லுக்குள்ளும் ஆழ்ந்த மணலுக்குள்ளும் நுண்ணிதாய் நுழைந்து கிடக்கும். அதனால், அதற்கு நுணல் என்று பெயர்.

66

மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்

நுணலுந்தன் வாயாற் கெடும்”

(பழ. 114)

என்றார் முன்றுறையரையர்.

மஞ்சள்நாறி அல்லது மஞ்சள்நத்தி மரத்தின் காய், நுணல்போன்ற தோற்றமுடைமையால், நுணா எனப்பட்டது. பின்னர் அது சினையாகுபெயராய் மரத்திற்காயிற்று.

10

நரம்புச் சிலந்தியைக் குறிக்கும் நரவலி என்னும் பெயர், அச் சிலந்திபோன்ற கல்விருசம்பழத்திற்கு அல்லது மூக்குச்சளிப் பழத்திற்கு வடார்க்காட்டுப் பாங்கரில் வழங்கிவருகின்றது.

முந்திய ஆசிரியர்க்குத் தோன்றாது பிந்தின ஆசிரியர்க்குத் தோன்றும் மொழியியல்புகளை இலைமறைகாய் என்பதும், ஆசிரியர் தாமாகச் சொல்ல விரும்பாததும் மாணவர் வேறொன்றைப் பற்றி வினவி வலக்காரமாக அவர் வாயினின்று வருவிப்பதுமான பொருளைக் குரங்கெறி விளங்காய் என்பதும், இலக்கண ஆசிரியர் வழக்கம்.

10. நுணல் என்பது நுணலை என்றும், நுணா என்பது நுணவு நுணவம் நுணவை என்றும் திரியும். பொருள் வேறுபாடுணர்த்தற்கு, நுணல் நுணா என்பன ஈறு வேறுபட்டன.