அணியியற் சொற்கள்
15
பல பொருட்பெயர்கள், உவமையடிப்படையாக, அப் பொருள் களின் பண்பு குறித்துப் பெயரெச்சமாக வழங்கி வருகின்றன.
எ-டு:
சிறுமை அரிசிப்பல், குருவித்தலை, கிளிவாதில், நரிக் கெளிறு, எரியாமணக்கு.
நுண்சிறுமை - ஊசிமிளகாய், ஊசிவெடி.
கூர்மை - ஊசிக்காது.
பருமை - ஆனைநெருஞ்சில், கடாநாரத்தை. இடைமை (சிறுபருமை) - குதிரைவெடி. நெடுமை - ஒட்டகச் சிவிங்கி.
நீண்மை - பாம்புக்கெண்டை, நாகப்பூச்சி.
தாழ்வு - நாய்க்கடுகு, நாய்வேம்பு.
=
இழிவு கழுதைப் பொன்வண்டு, கழுதைக்கூத்து.
தீமை பேய்க்கரும்பு, பேய்வெள்ளரி.
-
வன்மை - கல்விருசு, கல்வாழை.
கருமை - காக்கைப்பிசின், காக்கைப்பொன்.
நீன்மை - மயில்துத்தம்.
மஞ்சண்மை - தங்கமேனி, பொன்வண்டு.
இனி, சில முதற்சினைப் பெயர்கள், உவமையாகு பெயராக வும், ஈறு பெற்றும் பெறாதுவரும் ஒப்புமைப் பெயராகவும், வழங்கி வருகின்றன.
எ-டு:
உவமையாகு பெயர்: ஆட்டுக்கொம்பு (அவரை), காக்கைக்கால் (கொண்டி), கிளிமூக்கு (மாங்காய்), குருவித்தலை (மதிலுறுப்பு).
ஒப்புமைப் பெயர்:
(1). ஈறுபெற்றன - காடைக்கண்ணி, குதிரைவாலி.
(2). ஈறுபெறாதன - ஆனைக்கால், மாட்டுப்பல்.