உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

வரலாற்றுச் சொற்கள்

ஒரு நாட்டின் பண்டை வரலாற்றையறியப் புத்தகமுஞ் செய்யுளுந்தான் வேண்டுமென்பதில்லை. அந் நாட்டு மொழி அல்லது சொற்கள்கூட வரலாறுரைப்பனவாகும்.

“பழங்கால மக்களின் கூட்டுறவுநிலை, அரசியல்நிலை இவற்றின் நினைவுச் சின்னங்களை இற்றைச் சொற்களிற் கண்டு, அவற்றைப்பற்றித் தம் கருத்தை யறிவிக்குமாறு ஆசிரியர் அவற்றைக் குறித்துவைத்தல் வேண்டும். ஒவ்வொரு நாட்டாரின் உள்ளுறு வாழ்க்கையும் அவரது மொழியிற் பெயராவெழுத்திற் பொறிக்கப் பட்டு, வருங்கால மக்களின் அறிவிற்காகப் போற்றப்படுகிறது; நாட்டு வரலாறு பழக்கவழக்கம், ஒழுக்க விதிகள் ஆகியவற்றைப் பொருள் வழக்கற்ற சொற்களினின்றும் வெளிப்படுத்தாத ஆசிரியர் மிகத் தவறியவராவர்” என்று கிரகம் என்னும் ஆங்கிலேய ஆசிரியர் கூறுகின்றார்.

ஆதலால், பண்டைத் தமிழர் வாழ்க்கைநிலையைப்பற்றி இற்றைத் தமிழ்ச்சொற்களினின்று நாம் அறியக் கூடியதென்ன வென்று பார்ப்போம். 1. பண்டை நிலநிலை

மாந்தன் தோன்று முன்பும் மக்கள் பெருகு முன்பும் ஞாலத்திலுள்ள நிலமெல்லாம் மரஞ் செடி கொடி படர்ந்து ஒரே

1. "The teacher ought to note for remark the living memorials, in the words of to day, of the social and political condition of the people in the ages gone by. The inner life of every people is stereotyped in their language, and retained there for the in- struction of future generations and the teacher will signally fail if he does not evoke from the fossil elements of words much of national history, customs and morals," - English Word-Book by John Graham.