உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வரலாற்றுச் சொற்கள்

21

மருமக்கள் தாயமே பண்டைத் தமிழ்நாட்டில் வழங்கி வந்த மையால், வழித்தோன்றல் மருகன் எனப்பட்டான். இப் பெயர் மருமகன் என்பதன் மரூஉ.

6. சம்பளம்

பழங்காலத்தில் சம்பளம் கூலமும் உப்புமாகக் கொடுக்கப் பட்டது. கூலம் தானியம். கூலத்திற் சிறந்தது நெல்லாதலின், நெல்வகையிற் சிறந்த சம்பாவின் பெயராலும், உப்பின் பெயராலும், சம்பளம் என்னும் பெயர் உண்டாயிற்று. சம்பும் அளமும் சேர்ந்தது சம்பளம். சம்பு என்பது சிறந்த நெல்வகைக்கும் சிறந்த கோரை வகைக்கும் பொதுப்பெயர்.

ஓங்கிவளர்ந்த சம்பாநெற்பயிரும் சம்பங்கோரையும் ஒத்த தோற்றமுடையனவா யிருத்தல் காண்க. நெல்லைக் குறிக்கும் சம்பு என்னும் பெயர் இன்று சம்பா என வழங்குகின்றது. உகரவீற்றுச் சொற்கள் ஆகார வீறு பெறுவது இயல்பே. எ - டு : கும்பு- கும்பா, தூம்பு- தூம்பா, குண்டு - குண்டா. கும்புதல் = திரளுதல்.

காண்க.

அளம் என்பது உப்பு. உப்பு விளைப்போர் அளவர் எனப்படுதல்

அளம் என்னும் சொல் தன் பொருளிழந்து ஈறாக மாறியபின், உப்பைக் குறிக்க உம்பளம் என்றொரு சொல் வேண்டியதாயிற்று. உப்பைச் சம்பளப் பகுதியாகக் கொடுக்கும் வழக்கம் நின்றுவிடவே, உம்பளம் என்னும் சொல்லும் அப் பொருளில் வழக்கு வீழ்ந்து, மானியமாகக் கொடுக்கும் நிலத்திற்குப் பெயராக ஆளப்பட்டது. உம்பு, உப்பு.

‘உப்புக்கு உழைத்தல்', ‘உப்பைத் தின்னுதல்’ என்னும் வழக்குகளையும், 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்னும் பழமொழியையும் நோக்குக.

7. எழுத்து

ஆதிமக்கள் மெல்ல மெல்ல நாகரிகமடைந்து ஒரு மொழியை வளர்த்துக்கொண்ட பின்பு, அது இடமும் காலமும் பற்றிய இருவகைச் சேய்மைக்கும் பயன்படுமாறு, அதற்கு எழுத்தையும்

5. கூலமாகக் கொடுக்கப்படுவது கூலி.

6. "Salary (Soldier's pay, which was given partly in salt, - wages" English Word - book, p.90).