உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

வேறுபாட்டோடு மட்டும் வழங்கி வந்தன என்பதும், மக்கட்கும் விலங்குகட்கும் பெரிதும் வேறுபாடில்லை யென்பதும் அறியப் படும்.

3. முல்லைநிலை

முல்லைநிலத்தில் மாடே மக்களின் பெருஞ் செல்வமாயிருந்த தினால், மாடு என்பது செல்வப் பெயராயிற்று.

4. திசைபற்றிய வழக்கு

சமற்கிருதத்தை வடமொழியென்றும், தமிழைத் தென்மொழி யென்றும், தொன்றுதொட்டு வழங்கி வருவதால், முன்னது வடக்கினின்று வந்த அயன்மொழியென்றும், பின்னது முதலி லிருந்தே தெற்கின்கண் வழங்கி வந்த நாட்டுமொழியென்றும், தெள்ளத் தெளிவாக அறியலாம். மொழிக்குச் சொன்னது மொழி யாளர்க்கும் ஒக்கும். சிலர் வரலாற்றுண்மைக்கு மாறாக வடமொழி யும் முற்காலத்தி லிருந்தே தென்னாட்டில் வழங்கி வந்ததென்பர். அவர்க்கு வடமொழி யென்னும் பெயரே வாயடைத்தல் காண்க.

5.உரிமைவழி

மக்களுக்குத் தலைமுறை தலைமுறையாய் உரிமை தொடர்ந்து வரும்வழி, தந்தைவழி தாய்வழி அல்லது மகன்வழி மகள்வழி என இரண்டாம். இவற்றுள் தாய்வழியே பழந்தமிழ் நாட்டில் வழங்கி வந்ததென்பதற்கு, தாயம் என்னும் பெயரே சான்றாம். தாய்வழிப் பெறுவது தாயம். தந்தைவழி அல்லது மகன்வழி ஆண்வழியும், தாய்வழி அல்லது மகள்வழி பெண்வழியும் ஆகும். ஆத்திரேலியா என்னுந் கெ தன்கண்டத்தில் பெண்வழி யுரிமையே இருந்துவருவதாகச்

சொல்லப்படுகின்றது.

மகள் பெறுவது மருமகனுக்கே உரியதாதலால், மகள் வழித் தாயம் மருமக்கள் தாயம் எனப்படும். ஒருவனது சொத்தை அவனுடைய உடன்பிறந்தாளின் ஆண்மக்கள் அடைவதெனச் சொல்லப்படும் மருமக்கள் தாயம் மலையாள நாட்டில் இன்றும் வழங்கிவருகின்றது. சோழ பாண்டிய நாடுகளில் மக்கள்தாயம் வழங்கிவர, சேரநாடாகிய மலையாளத்தில் மட்டும் மருமக்கள் தாயம் வழங்கிவரக் காரணம், அந் நாடு குடமலையால் பிரிக்கப்பட்டிருப்பதும்,

நெடுங்காலமாக ஏனையிரு தமிழ்நாடு களுடனும் தொடர்பு கொள்ளாமையுமே.