உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வரலாற்றுச் சொற்கள்

19

கிழங்கும் பாலும் கீரையும் பூவும் காயும் கனியும் நிழலும் உறையுளுமாகப் பலவகைப் பயனுதவிக் காத்த மரங்களையும் சோலைகளையும், தெய்வங்களாக வழிபட்டு வந்தனர் என ஊகிக்க இடமுண்டு.4

சிலர், பயன்படா மரஞ் செடி கொடிகளையும் ஒவ்வொரு காரணம்பற்றித் தெய்வத் தன்மையுடையனவாகக் கருதி, அவற்றை அணிந்தும் வழிபட்டும் வந்திருக்கின்றனர். கடம்பர் என்னும் வகுப்பார் கடப்பமரத்தைக் கடிமரமாகக் கொண்டிருந்தனர். ஆப்பிரிக்க அமெரிக்கப் பழங்குடி மக்கட்கும் இத்தகைய கொள்கை யுண்டு.

சைவர் உருத்திராக்கத்தையும், வைணவர் துளசியையும், பௌத்தர் அரசையும், சமணர்

அசோகையும்

தன்மையுடையதாகக் கருதுவதும் இத்தகையதே.

தெய்வத்

நிரைகவர்தல், நிரைமீட்டல், படையெடுத்தல், முற்றுகையிடல், மதில்காத்தல், பொருதல், ஊன்றிப் பொருதல், வெற்றிகொண்டாடல் முதலிய போர்வினைகட்கு ஆக்கந்தருவதாகக்கருதியே, முறையே, வெட்சி கரந்தை வஞ்சி உழிஞை நொச்சி தும்பை காஞ்சி வாகை மலர்களை முன்னைத் தமிழர் சூடியிருத்தல் வேண்டும். சில தழைகளும் பூக்களும் அவற்றின் மருத்துவ ஆற்றல் பற்றியும் அணியப்பட்டிருக்கலாம்.

,

திணை பால் வேறுபாடு தமிழிலக்கணத்தில் ஏற்பட்ட பின்பும், ஆண் பெண் என்னும் பாற்பெயர்களும், தந்தை தாய் என்னும் முறைப்பெயர்களும், மகவு, பிள்ளை, பார்ப்பு, குட்டி முதலிய இளமைப் பெயர்களும், சாத்தன், சாத்தி முதலிய விரவுப் பெயர்களும், மாக்கள் என்னும் பன்மைப் பெயரும், கடைக்குட்டி, பிள்ளைகுட்டி, கன்றுகயந்தலை என்னும் வழக்குகளும், உள்ளான் கத்தரிப்பான் முதலிய 'ஆன்' ஈற்றுப் பெயர்களும், மண்வெட்டி, காடைக்கண்ணி முதலிய இகரவீற்றுப் பெயர்களும் இருதிணைப் பொதுவாய் இருவகை வழக்கிலும் வழங்கி ங்கி வருதலான், முதற்காலத்தில் எல்லாச் சொற்களும் திணை வேறுபாடின்றி எண்

4. The Imperial Dictionary என்னும் ஆங்கில அகராதியில் Druid என்னும் மரவழிபாட்டுக் குருவைப்பற்றி, 'A priest or minister of religion among the an- cient Celtic nations in Gaul, Britain, and Germany..... They (the Druids), venerated the mistletoe when growing on the oak, a tree which they likewise esteemed sacred..." என எழுதப்பட்டுள்ளது. W. derw, Gr. drus, an oak; Skt. drus a tree; E. druid.