உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

ஒருகாலத்தில் பனிமலை கடலுக்குள் முழுகியும், தென் பெருங்கடல் குமரிமலையைக் கொண்ட உயர்நிலமாயு மிருந்ததினால், நாவலந்தேயத்தில் வடபால் தாழ்ந்தும், தென்பால் உயர்ந்துமிருந்தது. பனிமலை யெழுந்து குமரிமலை முழுகியபின், வடபால் உயர்ந்தும் தென்பால் தாழ்ந்தும் இருக்கின்றது. இதனால், வடதிசைக்கு உத்தரம் என்றும், தென்திசைக்குத் தக்கணம் என்றும் பெயர்.3 உ = உயர்வு; தக்கு = தாழ்வு; தரம், அணம் என்பன ஈறுகள். உகப்பு, உச்சி, உம்பர், உயரம், உன்னு, உன்னதம் முதலிய சொற்களில் உகரவடி உயர்வு குறித்தலையும், தக்குத் தொண்டை என்னும் உலக வழக்கில், தக்கு என்பது தாழ்வு குறித்தலையுங் காண்க. தரம் என்பது நிலை எனினும் ஒக்கும்.

2. குறிஞ்சிநிலை

தழைகொண்டு சேறல், சந்தனத்தழை தகாதென்று மறுத்தல், தழையெதிர்தல், தழையேற்பித்தல், தழைவிருப்புரைத்தல் முதலிய அகப்பொருட்டுறைகள் மக்கள் குறிஞ்சிநிலையில் தழையுடை யணிந் திருந்ததைக் காட்டும்.

தழையுடையின்பின்

மரவுரியாடை

யணியப்பட்டது.

மரவுரிக்குச் சீரை என்று பெயர். அப் பெயரே சீலை சேலை எனத் திரிந்து, இன்று பருத்தியாடையைக் குறிக்கின்றது.

புலால் உண்பவர், ஆடு கோழி முதலிய உயிர் (பிராணி)களைக் கொல்வதை, ஆடு கொல்லுதல், கோழி கொல்லுதல் என்னாது ஆட்டித்தல், கோழியடித்தல் எனக் கூறும் வழக்கு, மக்கள் குறிஞ்சி நிலையில் விலங்குகளையும் பறவைகளையும் கல்லாலும் வணரி (வளைதடி)யாலும் அடித்துக் கொன்றதை நினைப்பூட்டும்.

பண்டைத் தமிழரசர் ஒவ்வொரு மரத்தைக் கடிமரம் அல்லது காவல் மரமாகக்கொண்டு அதைப் பகைவர் அண்டாதபடி கருத்தாய்க் காத்துவந்ததினாலும், கா என்னும் சோலைப் பெயர்க்குக் காத்தற் பொருளு மிருப்பதாலும், ஒவ்வொரு திருப்பதியிலும் கடவு ளுருவிற்கு நிழல் தந்து நிற்கும் மரம் தலமரம் எனப் போற்றப் படுதலினாலும், முற்காலத்தில், மக்கள் மக்கள் அடிமுதல் முடிவரை

3. தமிழ்நாட்டின் மேல்கீழ்ப் பால்கள் முறையே உயர்ந்தும் தாழ்ந்துமிருப்பதால், அவற்றின் திசைகளும் மேற்கு கிழக்கு எனப்படுதல் காண்க. மேல் - மேற்கு; கீழ் - கிழக்கு.