உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வரலாற்றுச் சொற்கள்

25

நாகரிகம் மிக்க இக்காலத்தில், கொடும்பாவி கட்டி யிழுத்தற்குப் பதிலாகச் சூந்து கட்டித் தெருத்தெருவாக இழுத்து ஊருக்கு வெளியே கொண்டுபோய்க் கொளுத்திவிடுகின்றனர்.

11. வழக்கம்

,

ஒருவர் தம் சொந்த முயற்சியால் பெரும் பொருளீட்டியதைப் பாராட்டும் போது, "கோடியும் தேடிக் கொடிமரமும் நட்டி” என்று கூறுவது தென்னாட்டு வழக்கு. இதனால், பழந்தமிழ் நாட்டில் கோடி தொகுத்தவரெல்லாம் கொடிகட்டிப் பறக்கவிட்டனர் என்பது தெரிய வருகின்றது.

12. செந்தமிழ் எல்லை

தென்னாட்டில் யாரேனு மொருவர் இலக்கண வழுப்படப் பேசியதை வே வேறொருவர் திருத்தினால், திருத்தப்பட்டவர் திருத்தியவரை "இவர் திருத்தக் கல்லிற்குத் தெற்கிட்டுப் பிறந்தவர்” என்று நகையாடுவது வழக்கம். இதனால், பண்டைத் தமிழகத்தில் செந்தமிழ் வழங்கும் எல்லை குறிக்கக் கல் நட்டப்பட்டிருந்த தென்பதும், தெற்கே செல்லச் செல்லத் தமிழ் சிறந்திருந்ததென்பதும் வெளியாகும்.

13. குலப்பெயர்

மக்கள் பற்பல சமயங்களில் தமிழ்நாட்டினின்று ஈழத்திற்குக் குடியேறியது போன்றே, ஈழத்தினின்றும் தமிழ்நாட்டிற்குக் குடியேறி வந்திருக்கின்றனர். கரிகால் வளவன் ஈழத்தின்மேற் படையெடுத்துப் பன்னீராயிரம் குடிகளைச்சிறைபிடித்துக் கொண்டு வந்து, காவிரிக்குக் கரை கட்டுவித்ததாக அவன் மெய்க்கீர்த்தி கூறும். இங்ஙனம் கொண்டுவரப்பட்டவரும் குடியேறியவருமே ஈழவர் எனப்பட்டனர். மலையாள நாட்டில் இவரைத் தீவார் அல்லது தீயார் என்பர்.

கம்பளர் காம்பிலிச் சீமையினின்றும், இரட்டியார் இரட்ட யினின்றும், ஒட்டர் ஒட்டர அல்லது ஒரிசாச் சீமையினின்றும் வந்தவராவர்.

பாடி

செங்குந்தர் பாணர் என்பவர் தமிழ்நாட்டுத் தமிழரே யாயினும், தொழில் மாறியிருக்கின்றனர். செங்குந்தம் பிடித்துச் சோழருக்குப் படைமறவராயிருந்தவர் செங்குந்தர். பாண் அல்லது இசைத்தொழிலைக் கொண்டிருந்தவர் பாணர். இவ்விரு வகுப் பாரும், இன்று முறையே நெசவையும் தையலையும் மேற் கொண்டுள்ளனர்.