உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

6

“பாணர்க்குச் சொல்லுவதும் பைம்புனலை மூடுவதும்

தாணு வுரித்ததுவும் சக்கரத்தோன் - ஊணதுவும்

எம்மானை யேத்துவதும் ஈசனிடத் துஞ்சிரத்தும் தைம்மாசி பங்குனிமா தம்”

என்று காளமேகர் பாடியிருத்தல் காண்க. மலையாள நாட்டுப் பாணர் கூடையும் தாழங்குடையும் முடைவதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

14. ஆட்பெயர்

ஒருவனுக்கு மகனின் மகன் பேரன் எனப்படுவான். பெயரன் என்பது பேரன் என மருவிற்று. பாட்டன் பெயரைப் பேரனுக்கிடுவது பண்டை வழக்கமாதலால், பேரனுக்கு அப் பெயராயிற்று. சிலர் பாட்டனையும் பேரன் அல்லது பேரனார் என்பர். அரசகேசரி பரகேசரி என்ற பட்டங்கள், பிற்காலச் சோழர்க்கு ஒன்றுவிட்டு வழங்கியதும் இம் முறைபற்றியே.

15. ஊர்ப்பெயர்

மக்கள் மலை (குறிஞ்சி), காடு (முல்லை), நாடு (மருதம்), பாலை, கடற்கரை (நெய்தல்) என்னும் ஐந்திடங்களில் வேறு வேறு வாழ்ந்து வந்த பண்டைக்காலத்தில், குறிஞ்சிநிலத் தூர்கள் குறிச்சி, சிறுகுடி என்றும், முல்லைநிலத்தூர்கள் பாடி, சேரி என்றும், மருதநிலத்தூர்கள் ஊர் என்றும், பாலை நிலத்தூர்கள் பறந்தலை என்றும், நெய்தல் நிலத்தூர்கள் பாக்கம், பட்டினம் என்றும் ஈறுகொடுத்துக் கூறப்பட்டன. மக்கள் பல்கித் திணைமயக்கம் உண்டானபின், இவ் வழக்கம் பெரும்பாலும் நின்றுவிட்டது.

,

இடைக்காலத்தில் வழங்கிய சில ஊர்ப்பெயர்களும் ஊர்ப் பெயரீறுகளும் வெவ்வேறு காரணம் பற்றியவை: ஆறை என்பது ஆற்றூர்.

புத்தூர் என்பது புதியவூர்; மூதூர் என்பது பழையவூர்; பேரூர் என்பது மாநகர்; பட்டி என்பது கால்நடைத் தொழுவமுள்ள சிற்றூர்; பற்று என்பது தனிப்பட்டவர்க்கு அல்லது ஒரு சாரார்க்கு உரிய சிற்றூர் அல்லது சிற்றூர்த்தொகுதி; அடங்காப்பற்று என்பது அரசனாணைக் கடங்காதவர் வசிக்கும் ஊர்; பள்ளி என்பது பெளத்த சமண மடமுள்ள ஊர்; பாளையம் என்பது படையிருக்கும் ஊர்; பட்டு என்பது பாளையத்தலைவரான சிற்றரசர்க்கு விடப்பட்ட சிற்றூர் அல்லது சிற்றூர்த்தொகுதி; மங்கலம் என்பது பார்ப்பனரிருக்கும் ஊர்; வாடை என்பது வேட்டுவர், அல்லது இடையர் இருக்கும் ஊர்; பண்டார