உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மெய்ப்பொருட் சொற்கள்

"அவற்றுள்,

எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே”

(549)

35

என்றார்.

வேற்றுமை மொத்தம் எட்டெனவும், அவற்றுள் முதல் வேற்றுமை பெயரின் இயல்பே யெனவும், பிற வேற்றுமை யெல்லாம் அதன் திரிபெனவும், வேற்றுமை

இறுதி

பெயரின் விளியெனவும் கூறிய இலக்கணம்; லக்கணம்; இயல்பும் எழுவகைப் பிறப்புமாகிய ஆன்மநிலைகள் எட்டென்பதையும், அவற்றுள் முதல தொழிந்த ஏனையவெல்லாம் வேற்றுமைப்பட்டவை யென்பதையும், இறுதிநிலையாகிய மக்கட் பிறப்பில் இறைவன் ஆன்மாவைத் தன்னிடம் அழைத்துக் கொள்வான் என்பதையும், குறிப்பாயுணர்த்து மன்றோ?

வினைச்சொற்களுள், முற்றுவினை எச்சவினை என்பன முடிந்த வினை முடியாத வினைகளையும், இறந்தகாலவினை, நிகழ்காலவினை, எதிர்காலவினை என்பன எச்சவினை நுகர்வினை எதிர்வினை (சஞ்சிதம் பிராரத்தம் ஆகாமியம்) என்பவற்றையும் ஒத்துள்ளன.

இங்ஙனம், மொழிச்சொற்களும் இலக்கணக் குறியீடுகளும் மெய்ப்பொருளுண்மைகளையும் கருத்துகளையும் உணர்த்துவது, தமிழின் தனிப்பெருஞ் சிறப்பாம்.