உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

ஒருபொருட் பல சொற்கள்

எம்மொழியிலும் ஒரு பொருட்குப் பல சொற்களிருப்பின், அவை யாவும் பருப்பொருளில் ஒத்திருப்பினும் நுண்பொருளில் ஒத்திரா. ஆகவே, ஒருபொருட் பலசொற்களெல்லாம் நுண்பொருள் வேறுபாட்டை

யுடையன.

6 6

(மூதுரை, 13)

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்”

கோக்கண்டு மன்னர் குரைகடல் புக்கிலர்”

(தனிப்பாடல்)

(பழ.357)

அமையொடு வேய்கலாம் வெற்ப”

(தொண்டை - சத. 87)

(குறிஞ்சிப். 257)

தந்தப்பல் லக்குஞ் சிவிகையுந் தாங்கி”

"கொடுந்தாள் முதலையும் இடங்கருங் கராமும்”

என்ற அடிகளில், ஒருபொருட் பலசொற்கள் வந்து வெவ்வேறு பொருள்நுட்பங் குறித்தல் காண்க.

1. பொருள் வகை

1

பொருள் காட்சி கருத்து ஆகிய இரண்டற்கும் பொதுவான பொருள்; பண்டம் கட்புலனானதும் கனவடிவுள்ளதுமான உயிரற்ற பொருள்; சரக்கு காய்ந்த பொருள்; தாரம் இயற்கை விளைபொருள்; ஆக்கம் செயற்கை விளைபொருள்; செய்பொருள் கையாற் செய்யப்படும் பொருள்; உரு கன வடிவப் பொருள்; உருவம் பெருங் கனவடிவப் பொருள்; உருப்படி தனிப்பட்டதும் உயிரற்றதும் ஒன்றன்படியுமான கனவடிவுப்பொருள் (article); உடைமை உடம்பிலுள்ள ஆடையணிப்பொருள்; மதி அளவிடப்பட்டு வரி

1. இவ் வுண்மையை - 'Synonyms Discriminated', 'Words confused and Misused’ முதலிய ஆங்கில நூல்களுட் காண்க.