உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

4. குதிரைவகை

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

குதிரை குதிப்பது அல்லது தாண்டுவது; பாடலம் விரிந்த கழுத்தும் மார்பும் உடையது; கோணம் அல்லது கோடகம் முக்கோணக் கழுத்துடையது; இவுளி எதிர்த்துப் போர் புரிவது; வன்னி வெண்ணிறமானது; பரி வேகமாக ஓடுவது; கந்துகம் கடைந்த தூண்போன்ற கால்களையுடையது; கனவட்டம் கனமும் உருட்சியு முடையது; கோரம் கொடுமையானது; புரவி மதில் தாண்டுவது.

5.உடற்பெயர்

உடல் உடம்பிற் கைகால் தலையற்ற நடுப்பகுதி; உடம்பு முழுவுடம்பு (இவை ஆட்சிப்பொருள்கள்); உடக்கு உள்ளீடற்ற உடம்புக்கூடு; யாக்கை எழுவகைத் தாதுக்களாற் கட்டப்பட்டது; மெய் உயிரை மேலாகப் பொதிந்திருப்பது; மேனி உடம்பின் மேற்புறம்.

6. முதலைவகை

முதலை (gavial) தென்னாசியாவிற் பெரும்பான்மையாக வுள்ளது; டங்கர்(crocodile) வட ஆப்பிரிக்காவிற் பெரும்பான்மை யாகவுள்ளது; கராம் (allegator) தென் அமெரிக்காவிற் பெரும் பான்மையாகவுள்ளது. 7. தவளைவகை

தவளை தவிர்த்து அல்லது இடைவிட்டுப் பாய்வது; அரைத்தவளை வாலறாத குட்டித்தவளை; நுணல் மணலுக்குள் நுழைந்திருப்பது; தேரை திரைந்த தோலையுடையது; சொறியன் சொறியுள்ளது; மொங்கான் மிகப் பெரியது.

8. வான்சுடர்ப் பெயர்கள்

வெள்ளி வெண்மையாக இரவில் தெரியும் சிறு சுடர்ப் பொதுப்பெயர்; நாள் இருபத்தேழு நாண்மீன்களின் பொதுப்பெயர்; கோள் எழு கோள்களின் பொதுப்பெயர்; மீன் நாள்மீன் அல்லது கோள்மீன்; ஓரை பன்னீர் இராசியின் பொதுப்பெயர்.

9. கொடி வகை

கொடி சிறியது; பதாகை அல்லது படாகை பெரியது.

10.போன்மை (Likeness) வகைகள்

ஓவியம் வரையப்படும் சித்திரம்; கட்டளை உருவம் வார்க்கும் அச்சு; சிலை நினைவுகூர்தற்கு ஒருவரைப்போல் செய்துவைத்த