உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஒருபொருட் பல சொற்கள்

39

உருவம்; படிமை தெய்வச்சிலை; பதுமை தனிப்பட்டவரைக் குறியாது பொதுவாய்ச் செய்து வைக்கப்பட்ட ஆண் பெண் உருவம்; பொம்மை சிறு பதுமை; பாவை கனவளவில்லாத தோற்பாவை அல்லது கண்பாவை.

11. மறுதலை வகைகள்

எதிர் (opposite); திரித்தல் (alteration); பகை (enmity); மறுதலிப்பு (denial); மாற்றுமை அல்லது மறுதலை (contrariety); மறுப்பு (refutation); மறை (negation); எதிர்மறை (strong negation); மாற்றம் (transference); மாற்று (antidote); மாறு (exchange); முரண் (contradiction); விலக்கு (prohibition); வேற்றுமை (difference); வேறுபாடு (change).

12. நூல்வகை

நுவணம் (நுவணை) கலை இலக்கணம், புத்தகத்திற் கூறப்படும் பொருள்; புத்தகம் நூற்பொருள் எழுதிய ஏட்டுத் தொகுதி; பனுவல் பிரபந்தம்; வனப்பு செய்யுள் நூல் அல்லது காவிய வகை; சுவடி சிறு புத்தகம்.

கலை தொழிற்கலை (Art); நூல் அறிவுக்கலை (Science).

13. பாயிர வகைகள் 3

முகவுரை நூல் முகத்தில் உரைக்கப்படுவது; பதிகம் ஆக்கியோன் பெயர் நூல் வந்தவழி முதலிய பத்துப் பொருள்களைக் கூறுவது; அணிந்துரை நூலுக்கு அழகு செய்து நிற்பது; நூன்முகம் நூலின் தொடக்கமாயிருப்பது; புறவுரை நூலின் இறுதியில் உரைக்கப்படுவது; தந்துரை நூலிற் சொல்லப்படாத பொருளைத் தந்துரைப்பது; புனைந்துரை நூலைச் சிறப்பித்துரைப்பது.

14. யாப்பு வகை

யாப்பு சொற்களைப் பாவாக இசைத்தல் (Metrical composition); செய்யுள் அடிவரை யறுத்த மொழிநடை (Poetry); பா செய்யுள் வகை. (Poetic metre); பாவினம் இலக்கணம் நிரம்பாத பா; நூற்பா

3. பாயிரம் என்பது போர்முகத்திற் பகைவரை விளித்துக் கூறும் முகவுரை. பின்பு அது நூன் முகவுரைக்காயிற்று. பயிர்தல் - விளித்தல், அழைத்தல். "பாயிரங் கூறிப் படைதொக்கால் என்செய்ப” என்பது பழமொழி.