உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

இலக்கணங் கூறும் சூத்திரம்; பாட்டு பாடப்படும் தனிச்செய்யுள், இசைப்பா (poem, song); கீர்த்தனை கடவுளின் கீர்த்தியைக் கூறும் சைப்பாட்டு (lyric); பண்ணத்தி நாடோடிப் பாட்டு, தேவபாணி தெய்வத்தை வழுத்தும் செய்யுட்பா. பண்இராகம்; பாண் இசைத்தொழில்.

15. சான்றுவகை

ஆவணம் பத்திரம் (Record); அத்தாட்சி மெய்ப்பிக்குங் கையெழுத்து (ஹஸ்த சாக்ஷி); சான்று ஆதாரம் (Evidence); கரி (Witness).

16. புகழ்வகை

ஒளி நன்மதிப்பு; பெயர் அல்லது பேர் நல்ல வழியிலும் தீயவழியிலும் பரவும் பேர்; இசைப்புலவர் பாடுவதால் உண்டாகும் புகழ்; புகழ் இறந்த பின்னும் வழங்கும் உயர்த்துரை; சீர்த்தி அல்லது கீர்த்தி மிகுபுகழ்

17. ஒலிவகை

அரவம் பொதுவான ஒலி; குரல் தொண்டையொலி; ஆரவாரம் பெரிய ஊர்வலத்தில் கேட்கும் பல் இயவொலி; இரைச்சல் மழை அருவி சந்தைக்கூட்டம் முதலியவற்றின் பேரொலி; ஆர்ப்பு மாபெருங் கூட்டத்தின் வாழ்த்து அல்லது கண்டன வொலி; சிலம்பு எதிரொலி; சிலை' பாடும்போது கலகலவென்றிலங்கும் ஒலி; சந்தடி விழா நிகழிடத்திலும் மாநகர வீதியிலும், பல்வேறு கவனமுள்ள மக்கள் தொழிலாலுண்டாகும் ஒலி; கூச்சல் பலர்கூடிக் கத்துமொழி; பூசல் சண்டையிலும் போரிலும் கேட்கும் ஒலி; முழக்கம் இடியாலும் பறையாலும் உண்டாகும் பேரொலி; இசை இனிய ஒலி; ஒலி எழுத்தொலி; ஓசை சொற்றொடர் அல்லது பாட்டொலி; சந்தம் அசையொத்த அடிகளைக் கொண்ட பாட்டொலி; வண்ணம் எழுத்தொத்த அடிகளைக் கொண்ட பாட்டொலி.

18. மாலைவகை

கண்ணி இவ்விரு பூவாக இடைவிட்டுத் தொடுத்த மாலை; தார் கட்டிய மாலை; தொங்கல் தொங்கல் விட்டுக் கட்டிய மாலை;

4. அவன் பாடுகையிற் சிலையோடும்' என்பது தென்னாட்டு வழக்கு.