உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஒருபொருட் பல சொற்கள்

41

கதம்பம் அல்லது கத்திகை பலவகைப் பூக்களால் தொடுத்த மாலை; படலை பச்சிலையோடு மலர் விரவித்தொடுத்த மாலை; தெரியல் தெரிந்தெடுத்த மலராலாய மாலை; அலங்கல் சரிகை முதலிய வற்றால் விளங்கும் மாலை; தொடலை தொடுத்த மாலை; பிணையல் பின்னிய மாலை; கோவை கோத்த மாலை; கோதை கொண்டை மாலை; சிகழிகை தலை அல்லது உச்சி மாலை; சூட்டு நெற்றி மாலை; ஆரம் முத்து மாலை.

19.செருப்புவகை

மிதியடி ஒரே யடியுள்ளது. தொடுதோல் இடையன் செருப்புப் போலக் குதிங்காற்கும் புறங்காற்கும் வார்பூட்டியது; சப்பாத்து அகன்ற அடியுள்ளது; சோடு திரண்ட அடியுள்ளது; செருப்பு அளவான அகலமும் திரட்சியுமுடைய அடியுள்ளது; குறடு கட்டையாற் செய்தது.

20. சிவிகைவகை

சிவிகை மூடு பல்லக்கு; பல்லக்கு திறந்த பல்லக்கு.

21. மரக்கலவகை

புணை நீரில் மிதக்கும் கட்டை; தெப்பம் பல மிதப்புக் கட்டைகளின் சேர்க்கை; கட்டுமரம் இருகடையும் வளைந்த மரக்கட்டு; தோணி தோண்டப்பட்ட மரம் போல்வது; ஓடம் வேகமாய்ச் செல்லும் தட்டையான தோணி; திமில் திரண்ட மீன்படகு ‘திண்டிமில் வன்பரதவர்” (புறம். 24); பஃறி பன்றிபோன்ற வடிவமுள்ள தோணி; பரிசில் வட்டமான பிரம்புத் தோணி; அம்பி விலங்குமுகம் அல்லது பறவைமுகம் போன்ற முகப்பையுடைய மரத்தோணி; படகு பாய் கட்டிய தோணி; நாவாய் நீரைக் கொழித்துச் செல்லும் போர்க்கலம்; கப்பல் பலவாய் கட்டி வணிகச் சரக்கேற்றிச் செல்லும் பெருங்கலம்.

22. குற்ற வகைகள்

அரில் பொருள்கள் ஒழுங்கின்றி மடங்கிக்கிடக்கும் குற்றம்; அழுக்கு உடம்பிலும் உடையிலும் படியும் தீநாற்ற மாசு; ஆசு சக்கையும் மக்கும் வைத்து ஒட்டியதுபோன்ற குற்றம்; இழுக்கு ஒழுக்கக்கேடு; ஏதம் உறுப்பறை, உயிர்க்கேடு; கசடு மண்டி போன்ற குற்றம்; கரிசு பாவம் (sin); கரில் கொடுமை; களங்கம் கருத்