உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

ம்

தொளிப்பு; கறை வாழை நுங்கு முதலியவற்றின் சாற்றாலுண்டாகும் சாயம்; குற்றம் சட்டத்திற்கு மாறான செயல் (fault, guilt); குறை தேவை அல்லது ஊனம்; தப்பு அல்லது தப்பிதம் சரியல்லாதது(wrongness); தவறு ஒரு கடமையைச் செய்யாக் குற்றம் (failure); தீங்கு இன்னல் (harm); தீமை நன்மையல்லாதது (evil); துகள் புழுதிபோன்ற குற்றம்; நவை மக்கள்போன்ற குற்றம்; பழுது பழமையால் வந்த கெடுதல்.

பிழை ஒன்றிற்கு இன்னொன்றைச் சொல்லும் அல்லது கொள்ளும் குற்றம் (mistake); புகர் புள்ளி போன்ற குற்றம்; புரை துளைபோன்ற குற்றம்; போக்கு சேதம் அல்லது கழிவு; மயல் மயக்கத்திற்கிடம் குற்றம்; மறு மேனியிலுள்ள கரும்புள்ளி (mole) போன்ற குற்றம்; மாசு பொருள்களின்மேற் படியும் சிறு தூசி; மை கருமை; வழு இலக்கண நெறியினின்று விலகும் குற்றம் (error); வழுவாய் பாவம்; வடு தழும்புபோன்ற குற்றம்; வசை பழிப்பாகிய குற்றம்.

23. காற்றுவகை

வேற்றலம் (வாதம்); வளி (wind); சூறாவளி (tempest); சுழல் (whirlwind); காற்று (gas); அன்றமை(air); ஆவி(spirit, vapour); வெம்பாவி (mist); நீராவி (steam); புயல் (cyclone); உயிர் (life); கொண்டல் கிழக்கினின்று வீசும் மழைக்காற்று; தென்றல் தெற்கினின்று வீசும் இனிய மென்காற்று; கோடை மேற்கினின்று வீசும் வெப்பமான வன்காற்று; வாடை வடக்கினின்று வீசும் குளிர் காற்று.

24. கருவிவகை

கருவி பருப்பொருள் ஆய்தப்பொது (instrument); ஆயுதம் ஒரு தொழிற்குரிய கருவி (tool); படை போர்க்கருவி (weapon); கரணம் அறிவுக்கருவி அல்லது உறுப்புக்கருவி; காரணம் காரியத்தை விளைவிப்பது (cause); ஏது வாதக்காரணம் (reason); முதல் வணிகமுதல் போன்ற முதனிலை; அடி மரத்தின் அடிபோன்ற முதனிலை; மூதம் மரத்தின் வேர்போன்ற முதனிலை; வித்து மரம் முளைத்த விதைபோன்ற முதனிலை; தலைக்கீடு போலி ஏது (pretext).

25. கொடைவகை

ஐயம் இரப்போர்க்கிடுவது; கைந்நீட்டம் வேலைக்காரர்க்கு விழாநாளிற் கொடுப்பது; ஈவு இறைவன் பிறப்பில் ஒருவனுக்களித்த