உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஒருபொருட் பல சொற்கள்

43

வரம்; பரிசு அல்லது பரிசில் திறமை கண்டளிப்பது; கொடை உயர்ந்தோர்க்கும் சிறு தெய்வங்கட்கும் கொடுப்பது; நன்கொடை முழுவுரிமையாகக் கொடுக்கும் சன்மானம்; மானியம் (மானிபம்) விளைவை யுண்ணும்படி கொடுக்கும் நிலம்; கட்டளை கோயிலிற் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு விடும் நிபந்தம்; உறாவரை அல்லது முற்றூட்டு முழுவுரிமையாக அளிக்கும் நிலம்; இறையிலி அறத்திற்கு வரியில்லாது விடப்பட்ட நிலம்; தானம் அடியார்க்கும் பார்ப்பார்க்கும் அளிப்பது; பரிசம் மணப்பெண்ணுக் களிப்பது; வண்மை வரையாதளிப்பது; குருபூசை அடியார்க்குப் படைக்கும் விருந்து.

26. வெப்பவகை

அழல் (தழல்) அவியாத கனல்; அனல் (கனல்) சற்று அவிந்த கனல்; உருமிப்பு வெப்பநாளிற் காற்றில்லாமையால் நேரும் புழுக்கம்; எரி எரியுஞ் சுவாலை; கங்கு கனல்துண்டு; கணை மூலச்சூடு; காங்கை நிலத்தில் அல்லது வெளியிலுள்ள வெப்பம்; கணப்பு குளிர்காயும் கனல்; காய்ச்சல் உடம்பு சுடும் வெப்பம்; கொதிப்பு மேலெழுந்து பொங்கும் வெப்பம்; கொள்ளி எரியுங் கட்டையின் நுனியிலுள்ள நெருப்பு; சுரம் முதுவேனிற் பாலை; சூடு உணவினால் உடலிலுண்டாகும் வெப்பம்; புழுக்கம் காற்றில்லாத சரக்கறையில் வெயர்க்கும் வெப்பம்; வெக்கை எரியும் நெருப்பின் அண்மையிலுள்ள வெப்பம்; வெட்டை வெப்பமிகையால் உண்டாகும் ஒரு நோய் (gonorrhea); வெப்பம் தட்பம் என்பதற்கு எதிர்; வெப்பு உடல் வெப்பத்தால் உண்டாகும் தொழுநோய்; வெம்மை சுடும் வெப்பம்; வெதும்பல் சுடாவெப்பம்; வெயில் வெப்பமான கதிரவன் ஒளி; வேனல் கோடைக்கால வெப்ப மென்காற்று; வேனில் கோடைக்காலம்.

27. தொகுதிப் பெயர்

அம்பலம் (village assembly); அவை (audience); அவையம் (jury); ஆசிடை (association); ஆயம் (assembly); இல் அல்லது இல்லம் (house); கடிகை (village council); கணம் (society, host, body); கழகம் (academy); களம் (field); களரி (institute); குழு (faction, committee); குழூஉ (class); குழுமம் (guild); குழாம் (group); குழும்பு (company); கும்பு (gang); கும்பல் (crowd); குறி (village council); பெருங்குறி (meeting, gathering); கூளி (multitude); கூட்டம் (meeting, gathering); திரள் (mass); தொழுதி (herd, flock); தொகுதி (set, aggregation); தொகை (collection, sum); நெருள் (big crowd); பண்ணை (farm, a bevy