உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

of ladies); பொதியில் (public hall); மக்கள் (people); மந்தை ஆனிரை, மானிரை; மன்று, மன்றம் பொதுவிடம், அம்பலம், அறங் கூறவையம்; மாந்தர் (human beings); மன்பதை (humanity mankind); வகுப்பு (class).

தானை, சேனை(army); படை (division, force); பஞிலம் (company); கணகம் (battalion); மன்பதை (regiment); தண்டு (troop); தார் போர்ப்படையின் முன்னணி; கூழை போர்ப்படையின் முன்னணி; தூசு, தூசி கொடி தாங்கிச் செல்லும் கொடிப்படை.

தலைக்கட்டு; கணவனும் மனைவியும் மட்டும் உள்ள குடும்பம்; குடும்பம் கணவனும் மனைவி மக்களும் சேர்ந்த கூட்டம்; குடும்பு பல குடும்பங்கள் சேர்ந்த கூட்டம்; இல் அல்லது குடி பல தலைமுறையாகத் தொடர்ந்துவரும் பெருங் குடும்பு; மரபு தொடர்ந்துவரும் குடிவழி; குலம் பல குடிகள் சேர்ந்த தொகுதி (எ-டு: பள்ளியர், கவண்டர், அகம்படியர், குடியானவர் முதலிய பல குடிகள் சேர்ந்த தொகுதி (வேளாண் குலம்); னம் ஒரேவகையான மொழி பேசும் பல குலத்தொகுதி(nation); வரணம் நிறங்காரணமாக ஏற்பட்ட மாபெருங் குலம் (race).

28. இடவகை

இடம் அறுவகைப்பொருளில் ஒன்றான இடம்; தாவு ஒரு கூட்டத்தில் ஒருவன் இருக்குமிடம்; இருக்கை இருக்கும் ஆசனம்; வைப்பு வைத்திருக்கும் நிலம்; வரைப்பு எல்லையோடு சேர்ந்த இடம்; நிலை நிற்குமிடம் (stand); நிலையம் நிற்கும் பெரிய இடம் (station); நிலைக்களம் ஆதாரமான இடம்.

வயின்குறிப்பிட்ட சிற்றிடம்; அகம் உள்ளிடம்; புறம் வெளியிடம்; இடை பல பொருளுக்கு இடையிலுள்ள இடம்; நடு பல பொருளுக்குச் சரி நடுவிலுள்ள இடம்; அகடு ஒரே பொருளின் உள்நடுவிடம்; தலை மேலிடம்; கண் மேற்பரப்பிடம்; சூழல் சூழ்ந்திருக்குமிடம்; புடை சூழலில் ஒரு திசைப் பகுதி; மருங்கு ஒட்டியுள்ள ஒரு புறம்.

ஞாலம் பூமியாகிய கோள்; உலகம் ஞாலத்திலுள்ள உயிர்த்தொகுதி; நிலம் தரை; மண்நிலப்புழுதி(soil); மாநிலம் முழுத்தரை; நானிலம் நால்வகை நிலத்தொகுதி; வையம் அல்லது வையகம் படைக்கப்பட்ட உலகு.